கணிமொழிக்கு வாழ்த்துக்கள். இத்தகைய இணையதளம் ஒன்றிற்காக வெகுநாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன். இது மிகச்சிறந்த பணியாகும். தமிழ் கணிமையில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு - தியாகராஜன், சேலம்.
தட்டச்சு இயந்திரத்தில் உபயோகித்த குறிகளுக்கு தனித்த யுனிக்கோட் எண்களை கேட்டு வாங்கிவிட்டது நமது அரசு. மொழி அகர வரிசையில் உள்ள அனைத்து எழுத்துகளுக்கும் தனித்தனி யூனிகோட் எண்கள் வாங்காமல் விட்டது மிகுந்த வேதனையான, ஏமாற்றமான குறைபாடு. சீனா மொழி சுமார் 40,000 எழுத்துகளுக்கு யுனிக்கோட் குறிகளை பெற்றது. 217 அடிப்படை உயிர்மெய் எழுத்துக்களை உடைய தமிழ் 128 குறிகளை மட்டுமே கேட்டு பெற்றது.
இது பற்றி கூகிலிடம் கூறி அழுதேன். ஆனாலும் அவருக்கு நான் கேட்டது புரியல்லயோ என்னமோ அத்தருணத்தில் கிட்டவில்லை. அதுக்கு புரியம்படி எனக்கு கேட்க தெரியவில்லை. அப்படி இப்படின்னு பல வழிகளை காட்டியது! அப்படியாக தேடியபோது நான் நினைக்கிறேன் உபுன்டு 7.04வினை உள்நிறுவலுக்காக Wubi வெளியிடப்பட்டிருந்தது.
பெரும்பாலான கணிப்பொறி செய்நிரல்கள் ஆங்கில மொழியை பயன்படுத்துக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கில மொழி தெரிந்தவர் குறைவு. அதனால் செய்நிரல்கள் தமிழ் போன்ற நம்நாட்டு மொழியை பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
20,000 கோப்புகளைக் கொண்ட நிரலாக்கத்தில் உதவி ஆவணங்களை படித்து, கோப்புகளில் மாற்றங்களை கண்காணித்து, தேவையான கட்டமைப்பு கோப்புகளில் மாற்றங்களைச் செய்வது என்பது சிரமம். மேலும் புதிய வெளியீடு கிடைக்க வேண்டுமென்றால் என்னாகும் சற்று யோசியுங்கள்??
நிரலற்ற கணினியை உயிரற்ற உடம்பு என்றுதான் சொல்ல வேண்டும். கணினியினை துவங்குமாறு தாங்கள் ஏவியதும் இயங்கு தளமெனும் சிறப்பம்சங்கள் நிறைந்த நிரலினைத் துவக்குவதே அதன் முதற் பணி.
திறந்த மூல மென்பொருள் - கட்டற்ற மென்பொருளுக்கும் திறந்த மூல மென்பொருக்கும் இடையே அதன் ஆதரவாளர்களிள் நடைமுறை அணுகுமுறையைத் தவிர்த்து வேறெதுவும் வித்தியாசம் இல்லை. திறந்த மூல ஆதரவாளர்கள் தற்சமயம் மாற்றில்லாத தனியுரிம மென்பொருட்களோடு கூட்டாக செயல்படுவதை பொதுவாக ஏற்பர். கட்டற்ற மென்பொருள் ஆதரவாளர் அதற்கு மாற்றான கட்டற்ற மென்பொருளை உருவாக்குவதே தீர்வெனும் நிலைப்பாடு கொள்வர்.
அது சரி தம்பி! கணினில மட்டுந்தானா மென்பொருள் இருக்கு! அவனவன் ஊரைச்சுற்றி வரும்போது உடன் ஒட்டிகிட்டு திரியும் உரையாடிகளும் தான் மென்பொருட்களால் இயக்கப் படுகின்றன. அதுல பயன்படுத்தற மென்பொருளும் கட்டற்று இருக்க வேண்டாமா என ஏங்கியோரின் ஆசைகளை நனவாக்கும் விதமாக இந்தியச் சந்தையை இம்மாத இறுதியில் தட்ட விருக்கிறது நியோ பிரிரன்னர்!
கணிமொழியின் இம்மாத இதழ் வாசிக்கவல்ல பிடிஎப் ஆவணமாகவும் கிடைக்கப் பெறுகிறது. பதிவிறக்குதற்கான முகவரி: http://kanimozhi.org.in/padhivirakkam/Kanimozhi-Vaikasi-May-2008.pdf
இத்தளம் குறித்த தங்களது மேலான விமர்சனங்களை தள நிர்வாகிக்கு மடலிடவும். பதிப்புரிமம்: கணிமொழி (அ) உரையின் ஆசிரியர். அகிலமனைத்திலும் இக்குறிப்பினை அகற்றாது இம் முழுவுரையினை நகலெடுத்து விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.