தங்கமணி அருண், சி எப் டி மையம், ஐஐடி, சென்னை
குறிப்பு: சென்ற மாத கட்டுரையான ரெட்ஹாட் பொதி மேலாண்மையின் தொடர்ச்சி இது.
என்னென்ன பொதிகள்??? அவைகளை ஏன் நாம் நிர்வகிக்க வேண்டும்???
மேற்கண்ட கேள்விகளுக்கு நாம் பதில் தேடும் போது கணினியைப் பற்றி சில அடிப்படை விஷயங்களை அறிதல் வேண்டும்.
- கணினி(A Computer)
- அது இயங்கத்தேவையான தகவல்(Information)
- அதை இயக்கத் தேவையான ஒரு நிரல்(program)
எடுத்துக்காட்டாக, கணினியை எடுத்துக்கொண்டால் அது இயங்க தேவையான மின்சாரம், குளுமை (அ) வெப்ப சூழல் அத்துடன் தகவல் மற்றும் நிரல் ஆகியவைகளும் தேவைப்படுகிறது. கணினிக்குத் தேவையான தகவல் மற்றும் நிரல் கிடைக்க ஒரே வழி அவைகளை கணினியின் சேமிப்பு வட்டில், கோப்பு வடிவில் வைத்தாலே போதும். ஏனேன்றால் கணினிக்குத் தேவையான தகவல்கள் கோப்பு(file) வடிவில் அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
தகவலை எடுத்துக்கொண்டால் அதற்கென தனித்தேவை ஒன்றுமில்லை. எனவே அதற்கு சேமிப்பு வட்டில் போதுமான இடமிருந்தால் (free disk space) நல்லது. அத்தொடு நிரல் செயல்படத்தகுந்த அமைப்புடன் இருத்தல் வேண்டும்.
கடைசியாக, நாம் வைத்திருக்கும் நிரல் என்னத்துக்கு? அது எதுக்குனா! தகவலைப்போன்றே நிரலுக்கும் சேமிப்பு வட்டில் காலி இடம், அது மாத்திரம் இல்லாம கீழ்கண்டவைகளும் தேவைப்படுகின்றன,
- இது இயங்க தகவல் தேவைப்படலாம், தகுந்த அமைப்பு, முறையான பெயர் மற்றும் வட்டு தட்டில் இருக்க வேண்டும்.
- இதற்கு ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட கட்டமைப்பு(configuration files) கோப்புகள் தேவைப்படலாம். இந்த கோப்புகள் தான் நிரலின் போக்கு மற்றும் வகைப்பாடுகளைச் செய்கிறது.
- இதற்கு வட்டில் சரியான முறையில் பெயரிடப்பட்ட பகுதியில் காலியான இடம் தேவைப்படலாம்.
- இதுக்கு வேறு சில நிரல்களும் தேவைப்படலாம், அவைகளுக்கும் அதுப்போலவே வேறு நிரல்கள் தேவைப்படலாம்.
- அதுபோலவே நிரல்களை இயக்கத்தேவையான உதவி நிரல்களைக் கொண்ட பல கோப்புகளும் இருக்கலாம்.
நீங்கள் சற்று யோசித்து பார்க்கணும் இது எவ்வளவு சிக்கலான வேலை என்று. எல்லாம் சரியாக கட்டமைக்கப்பட்டிருந்தால் நல்லது, அப்படி இல்லையென்றால் நிரலை இயக்க கீழ்கண்ட இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன.
- நிரலுடன் வந்த ஆவணங்களை படித்த பிறகு பல்வேறு நிரல்கள், கட்டமைப்பு கோப்புகள், மற்றும் தகவல்கள் போன்றவற்றை நகல் எடுத்து கணினியில் சேமிக்க வேண்டும் மற்றும் அவைகள் சரியான பெயரில், தகுந்த இடத்தில், தேவையான காலி இடத்துடன் இருக்குமாறு அமைக்க வேண்டும். கட்டமைப்பு கோப்புகளில் தேவையான மாற்றங்களைச் செய்தல் வேண்டும். கடைசியாக நிரலை இயக்கும் போது கேட்கும் தகவல்களைத் தந்து வேலையை முடிக்க வேண்டும்.
- கணினியே அத்தகைய வேலையை செய்தல்.
குறைந்த கோப்புகளுடன் கூடிய நிரலாக்க(programming) பயன்பாடுகளுக்கு (Applications) முதல்(1) வாய்ப்பு சரியானது. இதில் அடுத்த வெளியீடு செய்யும்போது கோப்புகளுக்கு இடையிலான மாற்றங்களை கண்காணிக்க எளிது. ஆனால் 20,000 கோப்புகளைக் கொண்ட நிரலாக்கத்தில் உதவி ஆவணங்களை படித்து, கோப்புகளில் மாற்றங்களை கண்காணித்து, தேவையான கட்டமைப்பு கோப்புகளில் மாற்றங்களைச் செய்வது என்பது சிரமம். மேலும் புதிய வெளியீடு கிடைக்க வேண்டுமென்றால் என்னாகும் சற்று யோசியுங்கள்??
இதற்கு சிலர் இரண்டாவது வாய்ப்பே சரியானது என கருதினர். எனவே தான் ஆர்பிஎம் அவர்களுக்காக உருவாக்கப்பட்டது.
பொதி என்றால் என்ன ?? அது எப்படி இருக்கும் ?? அதன் பயன் என்ன ??
நீங்கள் அதை மேலாண்மை செய்கிறீர்களா (அ) அது செய்கிறதா ??
அவைகளை எப்படி கண்காணிப்பது ??
எப்படி பொதி மேலாண்மை செய்வது ??
அதற்கு முன் என்னென்ன பொதி மேலாண்மை நிரல்கள் இருந்தன ??
ஆர்பிஎம் வெளியீட்டு வரிசைகள்(versions) ??
ஆர்பிஎம் உருவாக்கப்பட்டதின் நோக்கங்கள் ??
ஆர்பிஎம்(அ) பொதியில் என்னென்ன உள்ளன ??
போன்ற வினாக்களுக்கு அடுத்து வரும் இதழில் பதில் காணலாம்.
--தொடருமுல்ல