கணிமொழி - வைகாசி - மே 2008

உள்ளிருந்தே விடுதலை...

Wubi, இன் தேவை அல்லது தேடல்

எங்கேயோ ஓர் இடத்தில் உபுண்டு பற்றி கேள்வியுற்றேன், அதில் எனக்கு கிடைத்தது எது வென்றால் அர்ச்சுனனுக்கு கிளியின் கழுத்து தெரிந்த மாதிரி லாஞ்சு பேட் இனது இணைப்பாக இருந்த ஷிப்இட் இனது இணைப்புத்தான் கிடைத்தது, அதில் எனக்கும் ஒரு கணக்கு திறந்தேன். அதன் மூலம் வட்டுக்களை (CD) பெற்றுக்கொண்டேன்.

ஆனால் அப்போ அதனை உள்நிறுவிப்பார்க்க கணினிகள் என்னிடம் இல்லை, பல்கலைக்கழக கணினியில் அல்லது நண்பங்க கணினியில்தான் இடவேன்டும். ஆனால் அது எனக்கு சிரமமாயிருக்கவில்லை. ஏனெனில் பலரும் கணினிகளை என்னிடம் அவர்களது தவறு களைய (Troubleshoot பண்ண) தருவார்கள். (அதனை எனது மேலதிக தேடலிற்கு சற்று உதவியாய் பயன்படுத்தலாம். அப்படி ஏதாவது தவறானால் மீளவும் அதனை நிறுவிக்கொடுக்கலாம் ஆதலால்) அப்படி இல்லாதவங்க நிலை?.

ஆனால் எனது பல்கலைக்கழகத்தில் வந்த கணினிகளில் OEM Version Windows இடப்பட்டிருந்தது. ஆனாலும் என்ன நம்ம இன்னும் ஒரு பகுதியில் போடலாம்னு போனா Copy Rights parties விடுவானுகளா வழைத்துக்கட்டுரவனுகளல்லவா கட்டித்தான் இருந்தானுங்கப்பா அங்கேயும் எப்படீன்னு கேட்பது விளங்குது , சொல்றன்.

அங்கு ஒரேயொரு Drive தான் இருந்தது. அதில்தான் MS Windows XP OS இனைப் போட்டிருந்தாங்க. அப்படி நாம அதற்கு வேறு Drive எடுக்கணும்னா திரும்பவும் எல்லாம் உள்நிறுவணும்(Install). அப்படி நிறுவினாலும் அதன் Drivers மென்பொருளுக்கான வட்டினை (CD) இட்டால் முதல் வேலையாக அத்தனை பகுதிகளையும் ஒன்றாக்குவதே அதன் முதல் காரியம். அப்படி இல்லாம வேறு ஏதாவதைப் பயன்படுத்தி பகுதி பிரிக்கவும் (Partitioning) அது அனுமதியாது.

ஆகவே இப்படியான புதிய தடைகள் எதற்காக அந்த வன்பொருள் கட்டுனர்களால் ஏற்படுத்தப்பட்டதெனில், நான் அறிந்த வரையில் கட்டற்ற மென்பொருளை அவர்களது கட்டுக்குள்ளிருக்கும் நாம், அறிந்து கொள்வதை தடுப்பது என்பதைத்தவிர வேறேதும் காரணம் இருப்பது எனக்கு தெரிந்தவரையில் இல்லை. ஏனெனில் பாகம்பிரிப்பது பாதுகாப்புக்காகத்தானே!

இது பற்றி கூகிலிடம் கூறி அழுதேன். ஆனாலும் அவருக்கு நான் கேட்டது புரியல்லயோ என்னமோ அத்தருணத்தில் கிட்டவில்லை. அதுக்கு புரியம்படி எனக்கு கேட்க தெரியவில்லை. அப்படி இப்படின்னு பல வழிகளை காட்டியது, அப்படியாக தேடியபோது நான் நினைக்கிறேன் உபுன்டு 7.04வினை உள்நிறுவலுக்காக Wubi வெளியிடப்பட்டிருந்தது.

அதன் நோக்கம் உபுண்டுவினை விண்டோஸில் இருந்தவாறு வட்டில்லாமல் நிறுவுதல். அதற்குரிய உபுண்டு கோப்புக்களை உபுன்டு தளத்திலிருந்து அதுவே பதிவிறக்கம் செய்து கொள்ளும். அப்படி நமக்கு நேரடி இணைய இணைப்பு இல்லாவிடில் ஒரு குறுக்கு வழிமூலம் அதனுள் உபுண்டு ISO கோப்பின் பிரதியினை இடலாம்.

Wubi 8.04 பற்றி சில வார்த்தைகள்

  • இப்போ உபி என்பது உபுண்டுவினது அதிகாரப்பூர்வ உபுண்டு உள்நிறுவி (Installer) மென்பொருள். பழைய பதிப்பிலும் பார்க்க புதிய 8.04 பதிப்பு புதியவங்க கையாள இலகுவாக்கப்பட்டுள்ளது.
  • இது உமது விண்டோஸ் இயங்கு தளத்தின் இற்றைவரையுள்ள Vista,Xp, 2000 ஆகியவற்றில் இருந்தவாறு எமது வழமையான டபுள்கிளிக்கின் (‘இங்குமா?’) மூலம் முழு உபுண்டுவையும் உள்நிறுவலாம். ஒரு சில படிகளில். (குறிப்பு : விண்டோ Me இற்கு ஒத்துழையாது, விண்டோ 98 பற்றி முழுமையாக பரிசோதிக்கவில்லையாம். ஆனால் வேலை செய்யலாமாம்).

எப்படி அல்லது எங்கு கிடைக்கும் ?

  • உபுண்டு 8.04 மேசைத்தள பதிப்பு வட்டு (CD)
  • உபி 8.04 பதிவிறக்கம் மற்றும் உபுண்டு 8.04 மேசைத்தள ISO பதிவிறக்கம் (Wubi , ISO இரண்டினையும் ஒரே இடத்தில் வைத்து கணினியின் இணைய இணைப்பை துண்டிக்கவும்).
  • ISO வினைக்கொன்ட உள்நிறுவல் சிறப்பாகவும் இலகுவாகவும் குறைந்த நேரத்தினுள் உள்நிறுவிடவும் கூடியதாயிருக்கும். ( ஏனெனில் வட்டினை பாவித்து உள்நிறுவும் போது முதலில Wubi ஆனது பிம்பக்கோப்பினை (ISO image) உருவாக்க சாதாரணமாக 10 நிமிடம்கள் எடுக்கிறது )

Wubi 8.04 நிறுவலுக்கு தேவையானவை

  • விண்டோஸ் நிறுவப்பட்ட கணினி ;-)
  • மற்றது உபுண்டு 8.04 இற்கு பொருத்தமாக ஏனைய வன்பொருள் (Hardware) கட்டமைப்பு, மிகக்குறைந்தது வன்தட்டில் 5GB இடம், 256MB RAM
  • எல்லாமாக புதிய கணினி எனில் 30 நிமிடங்கள் பொறுமை (உமது கணினியைப்பொறுத்து இன்னும் குறைவான நேரம் போதும்).