Wubi 8.04 உள்நிறுவல் செயன்முறை
கணினியின் விண்டோஸ் இயங்கு தளத்தை தொடக்கவும். இங்கு விண்டோஸ் XP புரொபஸனல் இயங்குதளத்தின் Wubi செயற்பாட்டினை கீழே வரும் படிகளில் விளக்கியுள்ளோம்.
- கணினியினுள் உபுண்டு 8.04 மேசைத்தள பதிப்பு வட்டினை (CD) உள்ளிடவும்.
- வட்டு தானியக்க (Auto run feature) செயற்பாடு இயக்கப்பட்டிருப்பின் தானாக வட்டு இயங்கும். இல்லாவிடில் My Computer இற்குச்சென்று உபுண்டு வட்டினை இயக்குக (அதாங்க டபுள்கிளிக்குங்க, ‘இதெல்லாம் நமக்கு அத்தப்படில்ல’ என்று யாரோ சொல்றது கேட்குது !).
- Umenu விண்டோ படம் 02 இலுள்ளபடி தோன்றும், அதில் மூன்று கட்டளை சிறைப்பட்டிருக்கும்,
Demo and full install
Install inside Windows
Learn more - அதிலுள்ள Install Inside Windows என்பதை சொடுக்குங்க (அதான் நம்ம கிளிக்கு)
- அதனைத் தொடர்ந்து Wubi உள்நிறுவி இயங்கத்தொடங்கும்.
Wubi உள்நிறுவியின் மிகச்சுலபமான சில படிமுறைகளினை தொடர்ந்து உபுண்டு உள்நிறுவல் செய்யப்படும்,
- உபுண்டு தளம் அமையப்பெற விரும்பும் உள்நிறுவல் இடத்தினை தெரிவு செய்க. அது எந்த Drive இல் வேண்டுமானாலும் இருக்கலாம்.
- உமக்குப்போதியளவு நிறுவலிற்கான வன்தட்டினளவை தெரிவு செய்க. கண்டிப்பாக 4GB மேலிருத்தலைக்கவனிக்க. அனேகமாக அதில் இயல்பிருப்பாக (Default) இருக்கும் 8GB இனையே தெரிதல் பொதுவாக நலம்.
- நமது Wubi உள்நிறுவிக்கான மொழியினை தேர்வுசெய்க.
- நமது கணினியின் உபுன்டு இயங்கு தளத்துக்கான நிர்வாகிக்கான பயனாளர் பெயரினை வழங்கவும்.
- அதற்கான கடவுச்சொல்லினை இரண்டு கட்டங்களிலும் இடவும்.
- அதனை அடுத்து Install என்பதனை சொடுக்குக. குறிப்பு : நீங்கள் வட்டிலிருந்து உள்நிறுவல் செய்கையில் அதன் முதற்படியாக வட்டிலிருக்கும் உபுண்டு ஆனது முதலில் iso பிம்பமாக்கப்படும் (படம் 04), உம்மிடம் பிம்பவடிவம் பதிவிறக்கம் செய்திருப்பின் 10 நிமிடம் மிச்சம்.
- அத்துடன் உமது உபுண்டு உள்நிறுவல் வேலை முடிந்தது. இரண்டு வளையம் உங்கள் கணினியைச் சுற்றி ஓடுங்க ;) .
இறுதியாக Reboot now என்பதனை தெரிவு செய்து Finish பண்ணவும். கணினியை மீளத்துவங்கி தானாகவே உள் நிறுவி தனது காரியத்தை இனிதே பூர்த்தியாக்கி Wubi உம்மிடம் பாரம் தரும். அதன்பின் உமது கணினி boot ஆகும் போது கீழ்வருமாறு உமது தொடக்க பக்கம் அமையும். அதில் உமக்கு தேவையானதை தெரிந்து கணினியை துவங்களாம்.