கணிமொழி - வைகாசி - மே 2008

உபி - உள்ளிருந்தே விடுதலை...

அப்துல் ஹலீம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், கல்முனை

கடந்த காலங்களில் வெளியிடப்பட்டிருந்த உபுண்டு பதிப்பின் பழகுவட்டு / நிகழ் வட்டு (Live CD) உபுண்டுவை தொடக்கூடியதாயிருந்தது. அத்துடன் சில மைக்ரோசாப்ட் விண்டோஸிற்கான கட்டற்ற மென்பொருட்களையும் கொண்டிருந்தது.

ஆனால் இம்முறை இறுதியாக வெளிவந்த ஹார்டி ஹெரான் அதிலும் ஒரு சிறப்பான படி முன்னே சென்றுள்ளது. உண்மையில் அது மிக சிறப்பானதும் அவசியமானதுமான ஒன்றாக நான் கருதுகிறேன். அது வேறொன்றுமில்லை உபி (Wubi) எனப்படும் ஒரு மென்பொருளை தனது உத்தியோகபூர்வ வெளியீட்டில் உள்வாங்கியுள்ளமையாகும். அத்துடன் smenu வும்தான்.

Wubi? அப்படின்னா? எனப்புதியவங்க புருவமுயர்த்திரது விளங்குது! ஏன்னா இது மற்றவங்களை விட முழுக்கவும் கட்டற்ற மென்பொருட்களின் புதியவர்களுக்காகவே உள்ளடக்கப்பட்டது. அய்யோ! மற்றவங்க என்னை அடிக்கிறமாதிரி பாக்காதீங்கப்பா! அதுதானே உண்மை! ஏன்னா நீங்கலெல்லாம் அதற்குரிய தேவை இல்லாதவங்க இல்லையா?

நீங்க லுபி (Lubi) வினைப்பாருங்கப்பா நாங்க உபி (Wubi) தனைப்பார்க்கிறோம். மற்றது யாரும் உப்பி என்னா காதலியா எனக்கேட்டுடாதீங்க! அதனால்தான் ஆங்கிலத்திலேயை இட்டுள்ளேன். நாங்க ரொம்ப நல்ல புள்ளைங்க! ஆனாலும் ஒருவகையில் ரொம்ப அன்புக்குரியதுதான் காதலியை விடவும்.

ஏன் அப்படிச்சொல்றேன் என்பதனை எனது சொந்த அனுபவங்களை சுருக்கமா சொன்னப்பறம் புரிஞ்சுக்குவைங்க. ரொம்ப சுவாரஷ்யமானது எனது முதல் கட்டற்ற மென்பொருள் பற்றிய அனுபவம்.

நீங்க யோசிக்கலாம் Wubi பற்றி சொல்றேன்னுட்டு சுயசரிதை சொல்ரேன்னு. இதை ஏன் சொல்றேன்னா நானும் புதியவன். Wubi உம் புதியவங்களுக்கு கட்டற்ற மென்பொருளைப்பற்றிய அனுபவே இல்லை. ஏன்னா நாங்கள் எம்மை செல்லமா சொல்வோம் “டபள்கிளிக் கனவான்கள்” (Double Click) என்று. ஏன்னா, எமக்கு அதைப்பற்றி உள்ளந்தரங்கம் தெரியாது.

அப்படிய ஏதாவதொன்னை வாங்கினாலோ இல்ல கிடைச்சாலோ, அதைப்பற்றி ஆழமாக அறிவதற்கு, எமக்கு எதுவும் பன்ன இயலாது. ஏன்னா எங்களை Copy Rights என்ற சங்கிலியால் கட்டியலோ வச்சிருக்காங்க! அப்படின்னா எங்களுக்கு உள்ள ஒரே வழி நன்மையோ தீமையோ நாங்க எதைக்கண்டாலும் டபள் கிளிக்கு பன்னுவதுதான்! அத்தோட எங்கட கணினியில் கனவான்கள் இலவசமாக Virus களாக ( ஆமா ரொம்ப தேவை, அது மட்டும் இலவசம் ) குடியேறிக்கொள்வர்.

எனது கட்டற்ற மென்பொருள் உலக முதல் அனுபவம்

எனது கட்டற்ற மென்பொருள் (Free and Open Source Software) தேடலில், எனது நண்பர் ஒருவர் மூலம், எனக்கு fedora வட்டு (CD) கிடைத்தது. ஆனாலும் அதை உள்நிறுவலில் எனது IBM கணினி படாதபாடு படுத்தியது. பலதடவைகள் பார்மட் (Format) பண்ண வேண்டியாச்சுது. எனக்கு தெரிஞ்சவரையில் யாரும் இல்ல அதைப்பற்றி சொல்லித்தர. அதைக்கொடுத்த நன்பர் என்னை விட ரொம்பப் பாவம் ஏன்னா நானாச்சும் வன்தட்டின் ஒரு பகுதியை ஆச்சும் போட்டு குழைத்தேன். ஆனா அவர் சகல ஆவணங்களையும் பறிகொடுத்தார்.

எனக்கு அதனுடைய வன்பொருட்களுக்கான Driver களை பெறுவதில் ரொம்ப சிரமப்பட்டன். கடைசியில் வேணாம்னு போச்சு. அப்ப அதைக்கொடுத்த நன்பனிடம் கேட்டேன் அதன் புதிய வெளியீடுகள் கிடைத்ததாவென்று. அப்ப அவருக்கு அது கட்டற்ற மென்பொருள் எனத்தெரியாதோ என்னமோ எனக்கு அவர் சொன்ன பதில் “அதுக்கு இன்னும் பைரசி வரல்ல வந்ததும் பார்ப்பம். அதுக்கு யாரய்யா $ கணக்கில் காசு கொடுப்பது ! ” என்று. அய்யோ! அவரும் பாவம் நான் ரொம்பப் பாவம் இல்லையா! அப்ப எமக்கு கட்டற்ற மென்பொருள் பற்றி இருந்த வாயில் ரொம்ப இருக்கமா மூடப்பட்டிருந்ததை மேற் சொன்ன கதையில் புரிந்திருப்பீங்க.