சீனிவாசன், சென்னை
கணிமொழி அருமையாக உள்ளது.
சில கருத்துகள்.
- பின்னூட்டம் இட வேண்டும். தமிழில் உள்ளிட வசதி வேண்டும்.
- அடுத்த இதழ் பற்றிய அறிவிப்பு தேவை.
- உரை மட்டுமின்றி படம், ஒலிக்கோப்பு, விடியோ இருந்தால் சிறப்பு.
- "தொடர்பு கொள்ள" என்ற பக்கமும் படிவமும் தேவை.
- சற்று எளிய தமிழ் தேவை. என் ஊர் நண்பர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
- அவசிய இடங்களில் ஆங்கிலம் கலப்பது நன்று. ரெட் ஹாட், சிலாக்வேர் போன்ற பெயர்களை ஆங்கிலத்திலும் சொல்ல வேண்டும்.
- தமிழ் தட்டச்சு பற்றிய கட்டுரை தேவை.
தியாகராஜன், சேலம் (கருத்தின் தமிழாக்கம்)
கணிமொழிக்கு வாழ்த்துக்கள். இத்தகைய இணையதளம் ஒன்றிற்காக வெகுநாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன். இது மிகச்சிறந்த பணியாகும். தமிழ் கணிமையில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.
இணைய தளம் குறித்த நற்கருத்துக்களாவன:
- தெளிவான எளிமையான வடிவமைப்பு.
- வாசிக்க இலகுவான மின்னெழுத்து.
- நல்ல தமிழ் வாசகங்கள்
- தேவையை நிறைவேற்றும் அளவிற்கு விவரங்கள்.
கீழ்காணும் விடயங்களைக் கருதவும் :
- தளத்திற்கென்றொரு லோகோ
- தலைப்புகளுக்கு வண்ணமயமான ஓவங்கள்
- வினா விடை பகுதி
- பதிவிறக்க இணைப்புகள்
- தள விவரங்களை மாதந்தோரும் பிடிஎப் முறையில் நல்கும் வசதி
சில தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களை தர இயலுமா? (எலியத்தினை அதன் மேல் நகர்த்தும் போது (அ) ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றின் இணைப்பு மூலம்) நன்றி.
கேசவன், சோழவந்தான் (கருத்தின் தமிழாக்கம்)
திறந்த மூல ஆர்வலர்கள், வளரும் மாணாக்கர் முதலானோருக்கு தங்களது http://kanimozhi.org.in/ தளம் மிகவும் பயனுள்ள ஒன்றாக அமைந்திருக்க கண்டேன். தங்களது இணைய இதழில் திறந்த மூலம் தொடர்பான இன்னும் பல கட்டுரைகள் தமிழில் வெளிவர எதிர்பார்க்கிறேன்.
வாசுதேவன், கடலூர்
ஒரே பக்கத்தில் 5 தலைப்புகளையும் பார்க்கும் படி இருந்திருக்கலாம். இப்ப பக்கம் பக்கமா கீழே தள்ள வேண்டி இருக்கு. pdf வசதி செஞ்சு இருக்கலாமோ தரவிறக்கி அப்புறம் படிக்க.
வெங்கட்ரமணன், சென்னை
RSS வசதி இன்றியமையாதது மற்றும் பயனுள்ள ஒன்றே என்பது என் எண்ணம். எனவே விரைவில் இதை எதிர்பார்க்கிறேன்