மும்பை நகர பேருந்துகளில் லினக்ஸ்
மும்பை நகரில், பேருந்துகளில் டிக்கட்டுகள் விற்க 'ஸ்மார்ட் கார்டு' களை பயன் படுத்துகிறார்கள். பயணிகள் பேருந்து நிலைய அலுவலகங்களில் தேவையான பணத்திற்கு, ஸ்மார்ட் கார்டுகள் வாங்கலாம்.
பேருந்தில் ஏறிய பின், இதை கணிப்பொறியிடம் காட்டினாலே போதும். பேருந்துகளில் கணிப்பொறி, Smart card readers, Wireless LAN, GPS, வழி காட்டும் கருவி என எல்லா வசதிகளும் உள்ளன. தினமும் 30 லட்சம் ரூபாய் பண பரிமாற்றம் நடைபெறுகிறது.
லினக்ஸை பயன் படுத்துவதால், மும்பை மாநகரம் இதுவரை 12 லட்சம் ரூபாய்களை சேமித்துள்ளது. மேலும் படிக்க http://www.linux.com/feature/132871
முப்பரிமாண விளையாட்டுகள்
ஒரு காலத்தில், லினக்ஸில், பொழுது போக்கு விளையாட்டுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. ஆனால் இப்போது அதிக அளவில் விளையாட்டுகள் கிடைக்கின்றன. அதிலும் 3D - முப்பரிமாண விளையாட்டுகள் கிடைக்கின்றன.
உதாரணங்கள்,
கட்டற்ற மென்பொருள் - Blender ல் திரைப்படம்
முப்பரிமாண கார்ட்டூன் திரைப்படம் தயாரிக்க Maya, 3D Studio Max போன்ற விலை அதிகமான மென்பொருட்கள் இனி தேவையே இல்லை. கட்டற்ற மென்பொருளான Blender போதும்.
சமீபத்தில், "Big Bunk Bucky" என்ற திரைப்படம் Blender-ல் தயாரித்து வெளியிடப்பட்டது.
பதிவிறக்கம் (Download) செய்ய, http://www.bigbuckbunny.org. இந்த திரைப்படத்தை நீங்கள் பிறருக்கு தரலாம். பகிர்ந்து கொள்ளலாம்.
உபுண்டு கைப்பிடி தோழர் திட்டம்
உபுண்டு வட்டுகளை (CD), தமிழகம் எங்கும் கிடைக்கும் படி செய்ய, உபுண்டு தமிழ் குழுமம் (http://ubuntu-tam.org) "உபுண்டு கைப்பிடி தோழர் திட்டம்" தொடங்கி உள்ளது. இதற்கு தமிழகம் எங்கும் தன்னார்வ தொண்டர்கள் தேவை.
திரு. அருண் (thangam.arunx@gmail.com) அவர்களை தொடர்பு கொள்ளவும். மேலும் படிக்க, http://goinggnu.wordpress.com/2008/05/21/area-volunteers-needed-for-ubuntu-cds-distribution/
லினக்ஸுக்கு மாறும் 'மியூனிச்' நகரம்
ஜெர்மனியின் 'மியூனிச்' ( Munich ) நகரம், தனது அரசு முழுவதையும் லினக்ஸூக்கு மாற்றி வருகிறது.
தற்போது
- 1000 கணிணிகள் முழுவதுமாகவும்,
- 6000 கணிணிகள்OpenOffice-க்கும்,
- 90% கணிணிகள் Firefox, Thunderbird - க்கு மாறி உள்ளன.
மேலும் படிக்க, http://www.computerworlduk.com/toolbox/open-source/blogs/index.cfm?entryid=866&blogid=14