ஸ்ரீ ருத்ரன்
நண்பர்களுடன் யாஹூவிலோ ஸ்கைப்பிலோ கதைத்துக் கொண்டிருக்கிறீகள். வேலைக்குக் கிளம்ப நேரமாகிவிட்டது. பேருந்தைப் பிடித்தாக வேண்டும். "catch you later" என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறீர்கள். ஆனாலும், மனதில் ஒரு சின்ன ஆசை: பேருந்தில் அலுவலகம் போய்ச் சேர்வதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்.
இந்த ஒரு மணி நேரத்தில் இன்னும் கொஞ்சம் கதைக்கலாமே என்று ஆசைப்பட்டதுண்டல்லவா? உங்கள் ஆசையை நிறைவேற்ற வந்துவிட்டது 'மிட்' என அழைக்கப்படும் 'மொபைல் இணையக் கருவி' (Mobile Internet Device a.k.a. MID).
இது இன்டெல் நிறுவனத்தாரின் சமீபப் படைப்பு. 'Intel® Centrino® Atom™ தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டவை இந்த மிட்கள். இன்று இணையம் இல்லாத இடமே இல்லை எனலாம். அங்கிங்கெனாதபடி - கல்வி, பொழுதுபோக்கு, தொழில் என எல்லா இடங்களிலும் பரவி நிற்கிறது இணையம். இணையம் இல்லாவிட்டால் உலக இயக்கம் நின்றுவிடும் அளவுக்கு அது வியாபித்து நிற்கிறது. நாம் நடமாடும் போதும் இணைய வசதியை பெற செல்பேசி மூலமாக பெறுவதற்கு இன்று பல கருவிகள் உள்ளன. உதாரணமாக - ஆப்பிளின் ஐஃபோன், ரிம்-மின் ப்ளாக்பெர்ரி, நோக்கியாவின் N800 முதலியன. இவை, ARM தொழில்நுட்பத்தினால் செய்த கருவிகளாதலால் ரிச் இன்டெர்நெட் எனப்படும் செழித்த இணையத்தை இவை மூலமாக ACCESS செய்ய இயலாது.

அதாவது, நாம் ஒரு கணிணியில் யாஹூ தளத்தைப் பார்க்கிறோமென்றால் அதே தோற்றத்தில் நாம் ஆப்பிள் ஐஃபோனில் காண இயலாது. தோற்றம் மிகவும் வேறுபட்டிருக்கும். மேலும் - RSS, javascript, flash(*) உள்ள பக்கங்களை சரியாகப் பார்க்க முடியாது. மேலும், adobe reader, Google Talk, Skype, Adobe Flash player முதலியவற்றை இந் நிறுவனங்கள் (ஆப்பிள், ரிம், நோக்கியா) ARMக்கு பெயர்ப்பதற்கு (port) செய்வதற்கு பெரும் செலவு செய்கின்றன. ஆதலால் இந்தக் கருவிகளின் விலையும் மிகவும் அதிகம்.
இந்தக் குறைகளைப் போக்குவதற்காக இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த சாதனம் தான் இந்த மிட். இது இன்டெல் x86 கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதால் மேற்க்கண்ட பயன்பாடுகளை (applications) பெயர்க்கத் செய்யத் தேவையில்லை. உபயோகிப்போர் கணினியில் எவ்வெவ் பயன்பாடுகளையெல்லாம் பயன்படுத்துகிறாரோ அவ்வவ் பயன்பாடுகளையெல்லாம் ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே பயன்படுத்தலாம். தேவையான பயன்பாடுகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தலாம்.
போகுமிடமெல்லாம் கொண்டு செல்லத்தக்க வழியில் அதிக கனமில்லாததாக வடிவமைக்கப் பெற்றுள்ளது இதன் சிறப்பம்சம். மிகவும் குறைந்த மின்சக்தியைக் கொண்டு இயங்குவது ஆட்டம் (atom) இயக்கிகள் (processors). இதனால், முழுவதும் பலனூட்டப்பட்ட (charged) செய்த மிட்களை 6 முதல் 8 மணி நேரம் வரைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். சிறிய, அதே நேரத்தில் கச்சிதமான QWERTY விசைப்பலகை இணைக்கப்பட்டுள்ளதால் மிகவும் சுலபமாக மின்னஞ்சல், ஆவணங்களை தட்டச்சு செய்யலாம். எலியத்திற்கு பதிலாக தொடு திரையிருப்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்.
இப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்கு தளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. லினக்ஸ் மிட்கள் உபுண்டு லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட 'மொப்லின்' மற்றும் ரெட் ஃபாலாக்ன் 'மிடினக்ஸ்' லினக்ஸில் இயங்குகிறது. (http://www.ubuntu.com/products/mobile) இவற்றில் யூ.ஐ. ஆப்பிள் ஐபோனைப் போன்றே கவர்ச்சிகரமாக உள்ளது. மற்ற லினக்ஸ்களுக்கு உள்ளது போன்றே 'மொப்லின்'க்கும் மிகப்பெரிய கம்யூனிட்டி உள்ளது. நாமும் நம்முடைய பயன்பாடுகளை சமர்ப்பிக்கலாம். வெப் முகவரி: http://www.moblin.org
இன்டல் மற்றும் இன்டல் ஓவம் ஆகியன யுனைடட் ஸ்டேட்ஸ் மற்றும் இதர நாடுகளில் இன்டல் நிறுவனத்தார் அல்லது அதன் துணை நிறுவனங்களின் வர்த்தக முத்திரை அல்லது பதிவு பெற்ற வர்த்தக முத்திரை ஆகும். * ஏனைய பெயர்களும் அடையாளப் பெயர்களும் பிறரால் தங்களது உரிமைப்பொருளாக கோரப் பெறலாம். Intel(R) Centrino(R) Atom(TM)