கணிமொழி

கட்டற்ற கணிநுட்பம்

Archive for the ‘செய்தி’ Category

விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு அறிமுக நிகழ்ச்சி

without comments

கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு நாள் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி நிர்வாகம் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுக நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியானது சென்னை, பெரம்பலூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய  இரண்டு பகுதிகளிலுள்ள விவேகானந்தா பள்ளிகளில் நடப்பெற்றது.

ubuntu-demo

ubuntu-demo

சென்னையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள்  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியில் பங்கு  கொண்டதுடன்  உபுண்டு பற்றிய அறிமுகத்தையும்  பற்றி அறியும் வாய்ப்பை பெற்றனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை லினக்ஸை வட்டு மூலம் எப்படி இயக்குவது மற்றும் எப்படி நிறுவுவது என்பது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது.

மேலும் உபுண்டுவில் உள்ள கல்விக்கான மென்பொருள்கள் மூலம்  எப்படி  அன்றாடம் பாடங்களை படித்து பயன்பெறுவது என்பது பற்றியும் அறிமுகம் செய்து காட்டப்பட்டது. +2 மாணவர்கள் சிலருக்ககு உபுண்டுவில் “C”  மூலம் நிரல்கள் எழுதுவது  பற்றியும் அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. பின்னர் உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் எழுதி வழங்கப்பட்டன.

uabuntu-demo

uabuntu-demo

இந்நிகழ்ச்சி மூலம் பள்ளிகளுக்கு என்று தனி வட்டு ஒன்றை உருவாக்கவும் உபுண்டு தமிழ் குழுமம் முடிவு எடுத்துள்ளது, அதை வருங்கால நிகழ்ச்சியிகளில் வழங்கப்படும். மேலும் இதுபோன்ற பள்ளி நிகழ்ச்சிகள்  மூலம் கட்டற்ற மென்பொருள் அனைவரையும் சென்றடைய செய்தமைக்கு விவேகானந்தா பள்ளி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.

நிகழ்ச்சி இனிதே நடந்திட தன்னார்வத்துடன் முன்வந்து பங்களித்து உதவி புரிந்தமைக்கு இரவிச்சந்திரன், ஸ்ரீதர் – சுதேசிய இயக்கத்திற்கும், இராஜி, பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் – உபுண்டு தமிழ்  மற்றும் லினக்ஸ்-பயனர்- குழுமத்திற்கு  நெஞ்சார்ந்த  வணக்கங்கள்.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களை கான இங்கே செல்லவும்.

புதுமைப் புரட்சிக்கு வித்திட்ட லினக்ஸ் கருத்தரங்கு

without comments

DSCI0041

சேலத்தில் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாகலமாக நடைபெற்றது. இணையம் தொடர்பான சேவைகளை வழங்கிவரும் விஷுவல் மீடியா நிறுவனமும், சென்னை லிமேசன் டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ் செய்தித்தளமான சங்கமம்லைவ்.காம் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சேலம் பழைய பஸ்நிலையம் அருகேஉள்ள ஸ்ரீவாசவி மஹாலில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடுமையான மழையால் கருத்தரங்கு காலை 11 மணிக்கு துவங்கப்பட்டது.  உபுண்டு லினக்ஸ் தமிழ் ஒருங்கிணைப்பாளர் திரு.ராமதாசன் கலந்துகொண்டு இக்கருத்தரங்கை சிறப்பாக வழிநடத்தினார் அவருடன் ஈரோடு தனியார் கல்லூரி மாணவர் திரு.கனகராஜ் இணைந்து வழிநடத்தினார்.


இக்கருத்தரங்கில் திரு.ராமதாசன் அவர்கள்  கட்டற்ற மென்பொருளை பயன்படுத்துவதன் நோக்கம்  மற்றும் பயன்கள், உபுண்டு லினக்ஸ் பயன்கள், பயன்படுத்தும் முறை மற்றும் மென்பொருட்களை நிறுவும் முறை போன்றவற்றையும், திரு.கனகராஜ் அவர்கள் லினக்ஸ்சை நிறுவும் முறைப் பற்றி பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
linux1
பின் உணவு இடைவேளைக்குப் பிறகு கோவை கே.ஜி லினக்ஸ் சொல்யூசன் நிறுவனத்தினர் அவர்களின் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் -ன அதிரடி சோதனைப் பற்றியும் பின்னர் அதிலிருந்து  படிப்படியாக விண்டோசையும்  லினக்சையும்
தின் கிளையன்ட்(THIN CLIENT) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செலவினைகளை குறைத்தது  எவ்வாறு என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும் சென்னை மாப்டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் பல்க் SMS மற்றும் சிறு நிறுவனங்களுக்கான  மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருட்களையும் பற்றியும் விளக்கப்பட்டது.

linux_salem2
பின்னர் பார்வையாளர்களுக்கான கேள்வி நேரம் அறிவிக்கப்பட்டது.
அப்போது உபுண்டு லினக்சின் நோக்கம் என்ன, மேலும் அவற்றில் உள்ள நிறுவனங்களுக்கான ட்ரைவர்கள் கிடைக்கவில்லை என்று எடுத்துரைத்தனர். இக்கேள்விகளுக்கு ராமதாசன் அவர்கள் பதிலளித்தார். மேலும் இன்னொரு பார்வையாளர் ஏற்கனவே ரெட்ஹாட் போன்றவை பணம் கட்டித்தான் வாங்கவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை உபுண்டுவும் அப்படி மாறாது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்டு அதிரவைத்தார்.
அப்போது திரு.ராமதாசன் அவர்கள் சில விஷயங்களை நாம் தவறாக புரிந்துகொள்வதுதான் காரணம் ரெட்ஹேட் என்பது ட்ரேட் மார்க் . முதலில் ட்ரேட் மார்க் என்ன என்பதை நாம் சரியாகி புரிந்துகொள்ள வேண்டும் . மேலும் சிலர் இப்போது பயன்பாட்டிற்கு வந்த லினக்சில் மோடத்திற்கான ட்ரைவர்கள் கிடைக்கவில்லை என்று கேட்டனர். ஆனால் உபுண்டு லினக்சில் தற்போது வரும் பதிப்பில் அதற்கான அனைத்து ட்ரைவர்களும் தானாகவே எடுத்துக்கொள்ளப்பட்டும் என்றும் எடுத்துரைத்தார். அந்நேரத்தில் அவர் யூஎஸ்பி வழியாக இணையத்தை பயன்படுத்திக்காட்டினார். மேலும் விண்டோஸ் பயன்பாடுகளை வைன் (wine)இடைமுகத்துடன் எவ்வாறு பயன்படுத்துவது என்று ராமதாசன் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விரிவுரையாளர்கள் திரு.காமாட்சி மற்றும் கல்பனா சேக்கிழார், மற்றும் மருத்துவர் சேக்கிழார் , பாரத் பாலிடெக்னிக்கல்லூரி விரிவுரையாளர்கள் , மேட்டூர் அனல்மின்நிலைய ஊழியர்கள், சேலத்தில் உள்ள வணிக வரி அலுவலர்கள், நாகரத்தினம் பொறியியல் கல்லூரியின் சேர்மன் டாக்டர். சந்திரமோகன்,மற்றும் சேலத்த்தை சுற்றியுள்ள கல்லூரிகளில் இருந்து பெரும்பாலனோர் கலந்துகொண்டனர். கல்லூரிகளில் தற்போது பருவத்தேர்வுகள் நடைப்பெற்று வருவதால் மாணவர்கள் கலந்துகொள்ள இயலாதா சூழ்நிலையில் அவர்களின் சார்பில் அவர்களின் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிட்டத்தக்கது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு கேள்விகள் கேட்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
மேலும் இக்கருத்தரங்கு குறித்து பார்வையாளர்களிடம் கருத்து கேட்டபோது அனைவரும் இக்கருத்தரங்குகள்  மேலும் மேலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

லினக்ஸ் இயங்குதளம் குறித்த விழிப்புணர்வு அனைவரிடைய பரவலாக இருந்து வருகிறது என்றாலும் அதனை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க இதுபோன்ற கருத்தரங்குகள் தேவை
மேலும் இச்செய்தியை அனைவருக்கும் எடுத்துச்செல்ல உதவிய சுதந்திரமென்பொருள் வலைப்பூ மற்றும் மற்றும் சூர்யாகண்ணன் அவர்களின் வலைப்பூவிற்கும் , சென்னை ஆன்லைன் ஆசிரியர் மற்றும் நிறுவனத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

யாவர்க்குமான மென்பொருள் இயக்கம்/ அறக்கட்டளை

without comments

உபுண்டு தமிழ் குழுமம் உள்ளிட்ட கட்டற்ற மென்பொருள் தொடர்பான செயல்கள் தரும் உற்சாகத்தினைத் தொடர்ந்து தமிழகத்தில் இம்முயற்சிகளுக்கு பொதுவான செயல் வடிவம் கொடுக்கவும், http://kanimozhi.org.in/kanimozhi/?p=224 பக்கத்தில் உள்ளவற்றை மேற்கொள்ள வேண்டி வளங்கள் வசதிகள் திரட்டிட வேண்டியும், தகவல் தொழில்நுட்பத்தினைப் பொறுத்த வரை கட்டற்ற மென்பொருள் கொள்கையை தழுவியதாக அரசின் நிலைப்பாடு அமைய காரியங்கள் மேற்கொள்ளவும்யாவர்க்குமான மென்பொருள் இயக்கம்/ அறக்கட்டளைஅமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் கொள்கைகளால் உந்தப்பட்ட அதே சமயம் நமது தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப செயல்படும் இயக்கமாக இது அமையும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புக்கள் கலந்துரையாடல்களின் விளைவாய் இவ்வியக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இவ்வியக்கத்தின் முதற் படைப்பாய் கட்டற்ற மென்பொருள்புத்தகத்தினை காணிக்கையாக்குகிறோம். இம்முயற்சிக்கு தொடக்கம் முதலே உற்ற துணையாய் நிற்கும் ஸ்ரீநிவாஸன், அருண், பாரதி ஆகியோருக்கு நன்றி. இது குறித்த ஆரம்ப கட்ட விவாதங்களுக்கும் செயல்களுக்கும் அடித்தளம் அமைத்துத் தந்த என் ஆர் சி பாஸ் அமைப்பிற்கு நன்றி.

இம்முயற்சி வெற்றிபெற உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்.

Written by amachu

December 14th, 2008 at 10:00 am

கட்டற்ற மென்பொருள் புத்தகம் வெளியிடப்பட்டது

with 3 comments

ரிச்சர்ட் எம். ஸ்டால்மனின் “கட்டற்ற மென்பொருள்”  பற்றிய தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள், திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மென்விடுதலை நாள் விழாவின் ஒரு பகுதியாக, 20 செப் 08 அன்று புத்தகமாக வெளியிடப்பட்டது.

கட்டற்ற மென்பொருள் - ரிச்சர்ட் எம். ஸ்டால்மன்

கட்டற்ற மென்பொருள் - ரிச்சர்ட் எம். ஸ்டால்மன்

புத்தகத்தை ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் பேரா. ஆ. கனகராஜ் வெளியிட கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, இந்தியாவின் வழிகாட்டிகளுள் ஒருவரான கிரண் சந்திரா பெற்றுக்கொண்டு தமிழுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனை. இராஜா, சென்னை குனு லினக்ஸ் பயனர் குழுவின் பொறுப்பாளர் திரு. பாரதி சுப்ரமணியம், ஜெயா பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத் துறை தலைவர் திரு. கபாலீசுவரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆழி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. செந்தில்நாதன் புத்தகத்தினை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அந்நாள் முழுவதற்குமான அனைத்து நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளையும், திரு. குமரன் அவர்களின் தலைமையிலான அக்கல்லூரியின் ஜெயா பாஃஸ் கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

புத்தகத்தை வெளியிட்டு பேசிய பேரா. ஆ. கனகராஜ், ஜெயா கல்விக் குழுமங்களின் பயன்பாட்டிற்காக நூறு பிரதிகளை பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார். கட்டற்ற மென்பொருளின் சிறப்புகள் பற்றி கிரண் சந்திரா அவர்கள் உரையாற்றினார்கள்.

பல்வேறு கடைகளை அமைத்து கட்டற்ற மென்பொருள் பற்றிய பல்வேறு கருவிகளை வருகை புரிந்தோருக்கு மாணவர்கள் விளக்கிக் காட்டிய வண்ணம் இருந்தனர். பல்வேறு தலைப்புகளில் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

Written by admin

September 24th, 2008 at 6:20 am

அறிவியலுக்கு உதவும் லினக்ஸ்

without comments

ஐரோப்பிய அணு ஆய்வு மையத்தில்(CERN) அனைத்து கணினிகளும் குனு/லினக்ஸ் இயங்கு தளத்திலேயே இயங்குகின்றன. அம்மையத்தின் புதிய கருவியான Large Hadron Collider(LHC) ஐ கட்டுப்படுத்தும் கணினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பார்த்தாலே தெரிகிறது, அதில் தெரியும் சாளரம் KDEஇல் இயங்குகிறது என்பது.

மேலும் புகைப்படங்களுக்கு:
http://www.spiegel.de/fotostrecke/fotostrecke-35141-3.html
http://www.bbc.co.uk/radio4/bigbang/gallery.shtml?select=13

Written by அகிலன்

September 16th, 2008 at 3:41 pm

கால் நூற்றாண்டில் காலடி வைக்கும் குனு

without comments

கட்டற்ற மென்பொருளின் இன்றியமையாமையை வலியுறுத்தி 1984 ஆம் வருடம் துவக்கப்பெற்ற குனு திட்டம் தமது இருபத்து ஐந்தாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.

இது பற்றிய ஆங்கில நடிகர், நகைச்சுவையாளர், நாவலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்டீபன் பிரை என்பவரது சலனப்படம் பார்க்கக் கிடைக்கிறது.

இது பற்றிய குனுவின் செய்தியறிக்கை – http://www.fsf.org/news/freedom-fry/ முகவரியில் வாசிக்கக் கிடைக்கிறது.

Written by amachu

September 3rd, 2008 at 12:50 pm

Posted in செய்தி