Archive for the ‘திறந்த மூலம்’ Category
கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள் – அறிவியல் நகரம், சென்னை
சென்னை அக்டோபர் 20, “கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள்” எனும் கருப்பொருள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் அறிமுகப் பயிற்சி, சென்னை அறிவியல் நகரத்தில் நடைபெற்றது. சென்னையிலுள்ள ஆறு பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். காலை முப்பது
மாணவர்கள் மாலை முப்பது மாணவர்கள் என பயிற்சியின் பாங்கு அமைந்திருந்தது.
கலந்து கொண்ட மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுகம், வேதியியல், இயற்பியல் கணிதம்,
ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கற்பதற்குத் துணை புரியும் கட்டற்ற மென்பொருள்கள் சில விளக்கப்பட்டு, அவற்றை அவர்களே செய்து பார்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. கணினி வழி தமிழ் அறிமுகமும் தட்டச்சுப் பயிற்சியும்
வழங்கப்பட்டது. மாணவர்களோடு பள்ளி ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு வானவியல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பி. தேவதாஸ்
தொடங்கிவைத்தார். அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் முனைவர் பி. ஐயம்பெருமாள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை மாணவர்களுக்காக இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை & NRCFOSS-AU வின் பாரதி சுப்பிரமணியம் & ஸ்ரீ ராமதாஸ், உபுண்டு தமிழ்க் குழும தொடர்பாளர் தங்கமணி அருண் ஆகியோர் நடத்தினர்.
பி.கு:
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி பள்ளிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு உதவிய அறிவியல் நகரத்தின் அலுவலர் ஹேமா,
நிகழ்ச்சிக்கு மடிக்கணினிகள் தேவைப்பட்ட போது தங்களது மடிக்கணினியை தந்துதவிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் சௌமியா கிருஷ்ணன், இராஜேஷ்,
நிகழ்ச்சி குறித்த தங்கள் அலோசனைகளை வழங்கிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் பி. இராமன், தியாகு
ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலந்து கொண்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உபுண்டு இயங்குதள வட்டு உள்ளிட்ட ஆவணங்களின் தயாரிப்பிற்கான வளங்களை வழங்கிய கட்டற்ற திறந்த மூல மென்பொருள் வளத்திற்கான தேசிய மையம்,
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி அணுகிய போது அனுமதி தந்து ஊக்கமளித்து உதவிய அறிவியல் நகரத்தின் செயற்குழுவின், தலைவர் பேராசிரியர் எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவாலயமும் அங்காடியும் – 2
முதற் கட்டுரைக்கு சொடுக்கவும்..
யுனிக்ஸ் போதனைகளான சிறு கருவிகள், துரிதமான முந்தைய வடிவமைப்பு, படிப்படியாக விரிவுரும் நிரலாக்கம் இவைகளை நான் பல வருடங்களாக உபதேசித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், ஒரு நெருக்கடியான சிக்கல் இருந்ததற்குப் பின்னால் (எதையும் சாராத) ஒரே மையநோக்கு அணுகுமுறை ஒன்று அவசியம் என்றும் உணர்ந்தேன்.
மிக முக்கியமான மென்பொருள், (இயக்க அமைப்புகள் மற்றும் Emac நிரலாக்க பதிவாளர் போன்ற மிகப்பெரிய கருவிகள்) தனித்தனி வல்லுநர்களால் அல்லது உயரிய தனிமையில் வேலைசெய்யும் மேதாவிகளால் மிக கவனமாக தேவாலயங்களாக எழுப்பப்பட வேண்டுமென்று நம்பினேன்.
‘விரைவாக வெளியிடு அடிக்கடி வெளியிடு, உன்னால் முடிந்தளவு அதிகாரம் கொடு, கண்டபடி கலப்புக்குத் தயாராக இரு’ என்றபடி லைனஸ் டோர்வால்ட்ஸின் உருவாக்கப்பாணி எனக்குத் திகைப்பூட்டுவதாக இருந்தது. பயபக்தியுடன் அமைதியாக தேவாலயம் கட்டும் முறை இங்கு இல்லை. மாறாக லைனக்ஸ் சமூகம் வேறுபட்ட குறிப்பேடுகளையும் வழிமுறைகளையும் கொண்ட ஒரு சலசலப்பான பெரிய அங்காடி போன்று (லைனக்ஸ் சுவடிக் குறியிடங்களால் சரியாக அடையாளமிடப்பட்டு இருந்தது) இருந்தது. அடுத்தடுத்த அற்புதங்களால் மட்டுமே இதிலிருந்து ஒரு இசைந்திணைகிற, ஒரு நிலையான அமைப்புமுறை வெளிவருவதற்கானத் தோற்றம் தோன்றும்!
இந்த அங்காடி முறை நன்றாகவே வேலை செய்வதாகத் தோன்றும் உண்மை எனக்கு ஒரு தனி அதிர்ச்சியைத் தந்தது. நான் இதில் இயங்க, இயங்க, தனித்ததனி செயல்திட்டங்களில் கடுமையாக உழைத்தது மட்டுமன்றி, இந்த லைனக்ஸ் உலகம் குழப்பத்தில் சிதறிடாமல் இருப்பதையும், தேவாலயம் எழுப்புவோர் கற்பனை செய்ய முடியாதளவு விரைவாக மென்மேலும் வலுவாகிக் கொண்டுருப்பதையும் புரிந்துகொள்ள முயற்சிகப்பதிலும் உழைத்தேன்.
அது 1996 ஆம் வருடத்தின் நடுவில் எனக்கு புரிய ஆரம்பிப்பதாக உணர்ந்தேன். இதை சோதிக்க சரியான வழியாக, அங்காடி பாணியில் இயக்க நெஞ்சறிந்து முயற்சிக்கக்கூடிய ஒரு திறந்த மூல செயல்திட்டம் எதிர்பாராத விதமாக கிடைத்தது. அதனால் சோதித்தேன் – அது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியானது.
இதுதான் அந்த செயல்திட்டத்தின் கதை. பயனுள்ள திறந்த மூல உரிவாக்கத்தைக்பற்றி சில முதுமொழிகளை எடுத்துரைக்க இதை உபயோகிக்கிறேன். இவையனைத்துமே நான் லைனக்ஸ் உலகில் முதலில் கற்றுக் கொண்ட பாடங்கள் இல்லை. ஆனால் இந்த லைனக்ஸ் உலகம் இவைகளுக்கு ஒரு குறிப்பிட்டக் கருத்தை எப்படிக் கொடுக்கிறது என்று பார்ப்போம். நான் சொல்வது சரியென்றால், எதனால் லைனக்ஸ் சமூகம் நல்ல மென்பொருள் ஊற்றாகத் திகழ்கிறது என்று உங்களுக்குப்புரிய அவை உதவும் ஒரு வேளை, உங்கள் ஆக்கவளம் அதிகரிக்கவும் அவை உதவலாம்.
தேவாலயமும் அங்காடியும்…
திறந்த மூல இயக்கத்தை மீண்டும் தோற்றுவித்ததாகக் கூறிக்கொள்பவர் எரிக் எஸ் ரேமண்டு. திறந்த மூல உலகில் இ எஸ் ஆர் எனக் குறிக்கப்படுபவர். குனுவினை அதன் ஆரம்பக் காலத்திலிருந்து ஆதரித்து பங்களித்தவர்களில் இவரது பங்கு மகத்தானது. இவரது கத்தீட்ரல் அண்டு பசார் புத்தகம் இவரை திறந்த மூல இயக்கமென்றால் அது இ எஸ் ஆர் என்று சொல்ல வைத்தது எனலாம். அத்தகைய “கத்தீட்ரல் அண்டு பசார்” புத்தகத்தினை கணிமொழியில் தேவாலயமும் அங்காடியும் எனும் தலைப்பில் வழங்க விழைந்துள்ளார் அன்னபூரணி அவர்கள். தொடர்ந்து வாசித்து வாருங்கள். கருத்துக்களை மறுமொழிகளாக இடுங்கள்.
– ஆசிரியர்
முகவுரை
லைனக்ஸ் வரலாறு பரிந்துரைக்கும் மென்பொறியியல் பற்றின வியத்தகு கோட்பாடுகளை வேண்டுமென்றே ஆய்வு செய்யும் வகையில் இயக்கப்பட்ட, பெட்ச் மெயில் (fetch mail) எனும் ஒரு வெற்றிகரமான திறந்த மூல திட்டத்தை நான் பகுத்துப் பார்க்கிறேன். இந்தக் கோட்பாடுகளை பெருவாரியான வணிக உலகத்தின் “தேவாலய” படிவம் மற்றும் லைனக்ஸ் உலகத்தின் “அங்காடி” படிவம் என்று, அடிப்படையில் மாறுபட்ட இரண்டு உருவாக்க முறைகளைக் கொண்டு விவாதம் செய்கிறேன். பிழை நீக்குதலின் தன்மையைப் பற்றிய எதிரெதிரான ஊகங்களிலிருந்து இந்த இரண்டு முறைகளும் உருவாகின்றன என்று காட்டுகிறேன். “தேவையான அளவு நோட்டமிருக்கையில் அனைத்து வழுக்கலும் மேம்போக்கானவையே” என்கிற முன்மொழிக்கான தொடர் வாதங்களை லைனக்ஸ் அனுபவத்திலிருந்து அளிக்கிறேன். மேலும், தன்னைத் தானே திருத்திக் கொள்ளக் கூடிய மற்ற சுயநல இயக்கிகளின் அமைப்பு முறைகளைக் கொண்டு ஆக்கப்பூர்வமான ஒப்புமைகளை எடுத்துக் காட்டுகிறேன். இறுதியாக மென்பொருளின் எதிர்காலத்திற்கு இந்த உள்நோக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளையும் ஆராய்ந்து நிறைவு செய்கிறேன்.
தேவாலயமும் அங்காடியும்
லைனக்ஸ் ஆட்டிப் படைக்கிறது. ஐந்து வருடங்கள் முன்பு கூட (1991) இப்படியொரு அதிசயம் நிகழுமென்று – இணையத்தின் மெல்லிய உட்கூறுகளால் மட்டுமே இணைக்கப்பட்டு இந்த கிரகம் பூராவிலும் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக் கணக்கானவர்களின் பகுதி நேர hacking லிருந்து, ஏதோ மாயம் நிகழுமென்றோ, உலக தரம் வாய்ந்த ஒரு செய்திட்ட அமைப்பு முறை ஒன்று உருவாகுமென்றோ – யார்தான் நினைத்திருப்பார்கள்?
நிச்சயமாக நான் நினைக்கவில்லை. 1993 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் என் திரையில் லைனக்ஸ் தோன்ற ஆரம்பிக்கும் முன்பே 10 வருட காலமாக நான் யுனின்ஸ் மற்றும் திறந்த மூல திறந்த மூல உருவாக்கத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுருந்தேன். 1980 களில் குனு முயற்சியில் பங்களித்து உதவிய முதல் நபர்களில் நானும் ஒருவன். இன்றும் பெருமளவில் உபயோகத்திலுள்ள சில நிரல்களை தனியாகவோ கூட்டாகவோ தோற்றுவித்து (nethack, Emacs’s VC and GUD modes, xlife மற்றும் சில) நிறைய திறந்த மூல மென்பொருளை வலையில் வெளியிட்டிருக்கிறேன். அதை எப்படி செய்வதென்று அறிந்திருந்ததாக எண்ணினேன்.
எனக்குத் தெரிந்ததாக எண்ணியதில் பெரும்பகுதியை லைனக்ஸ் மறுத்துவிட்டது.
— தொடரும்





