கணிமொழி

கட்டற்ற கணிநுட்பம்

Archive for the ‘நுட்பம்’ Category

ரெட்ஹாட் பொதி மேலாண்மை – முதல் கட்டளை இயக்கம்

without comments

பொதி என்றால் என்ன என்பதை ஏற்கனவே  படித்திருப்பீர்கள்,இதில் இரண்டு வகைகள் உள்ளன, இதை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்,

1, பைனரி ஆர்பிஎம் (binary rpm)  -  இது போன்ற பொதிகளின் பெயர்கள் *.rpm என்று முடியும்,

2. சோர்ஸ் ஆர்பிஎம் (source rpm) -  இது போன்ற பொதிகளின் பெயர்கள் *,src.rpm என்று முடியும்,

ரெட்ஹாட்(RHEL), பெடோரா(Fedora),ஓபன்சுசே(OpenSuse), மான்டிரிவா(Mandriva) போன்ற சிறப்பான லினக்ஸ் வெயிடுகள் ஆர்பிஎம் போதி மேலாண்மையை அடிப்படையாக வைத்து வெளியடப்பட்டுள்ளன.

இது போன்ற பொதிகளை எப்படி மேலாண்மை செய்வது. இதை கையாள பயன்பாடுகள்(Red hat Package Manager) மற்றும் கட்டளைகளை கொண்டும் நிர்வகிக்கலாம்.இது போன்ற கணினி நிர்வாக கட்டளைகளை இயக்க கணினியின் ரூட் பயனரின் (root user) அனுமதி தேவைப்படும்

முனையத்தை திறப்பதன் மூலம் கட்டளை வரிகளை இயக்கத் தோடங்கலாம்.முனையத்தை திறந்தவுடன் ரூட் பயனராக(root user) மாற கீழ்கண்lகட்டளையை இயக்க வேண்டும்,

1, user@localhost# su – root — |_/> என்டர் பொத்தானை(Enter button) தட்டியவுடன் கடவுச்சொல் கேட்கும் அதை கொடுத்தால் கீழேயுள்ளவாறு வரும்.

2, root@localhost# – என்றவாறு மாறிவிடும். பின்னர் ஆர்பிஎம் கட்டளை கிழ்கண்டவாரு இயக்கலாம்.

3, root@localhost#rpm –help அல்லது root@localhost#man rpm – என்ற கட்டளையை இயக்கினால் அதை எந்தெந்த வாய்ப்புகளுடன் பயன்படுத்தினால் என்ன பயன்கள் உண்டு என்பதை விளக்கும்.

அடுத்த கட்டுரையில் மற்ற மேலாண்மை கட்டளைகளை பற்றி பார்க்கலாம்.

Written by Thangam Arun

March 31st, 2009 at 11:34 pm

Posted in நுட்பம்

Tagged with , , , ,

‘தன்மொழியாக்கம் – பன்மொழியாக்கம்’ – கட்டற்ற மென்பொருள் மாநாடு – கொச்சின்

without comments

நவம்பர் 15, 16 கேரள மாநிரம் கொச்சியில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருள் மாநாட்டின் ஒரு பகுதியாக ‘தன்மொழியாக்கம் – பன்மொழியாக்கம்’ (http://nfm2008.atps.in/) எனும் தலைப்பில் கோரா மொகந்திஷ்யாம் ஆகியோருடன் கலந்து கொண்டு அரங்கிலிருந்தோருடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இங்கே குறிப்பிடப்படும் விடயங்களுக்கு பலரது பங்களிப்புகள் தேவைப்படுகின்றன.

தொடர்ச்சியாக எவ்விதத்திலாவது பங்களிக்க இயலும், ஏற்பாடு செய்ய இயலும் என்றாலோ, அல்லது குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்தில் தாங்களோ தாங்கள் சார்ந்த அமைப்போ ஏற்கனவே ஈடுபட்டிருந்தாலோ இங்கே பகிர்ந்து கொள்ளவும்.
பணி இரட்டிப்பும் வீண் விரயமும் நேரா வண்ணம் தொடர்ந்து திட்டங்கள் மேற்கொள்ள இது உதவும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கட்டற்ற மென்பொருள் உலகிற்கு நாங்கள் அளித்து வரும் பங்கும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதாக நாங்கள் கருதுபவற்றையும் இவ்விடத்தே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

குநோம், கேடியி ஆகிய குனு லினக்ஸ் இயங்கு தள பணிச்சூழல்களில் குநோமின் தமிழாக்கப்பணி தொடர்ச்சியாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருந்து வருகிறது. கேடியி தமிழாக்கம் கடந்த வெளியீடு (4.1) முதற்கொண்டு
குறைந்தபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ளது. இப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன எனும் விடயமே நிறைவினைத் தரும் ஒன்றாகும்.  ஆயினும் இவையெல்லாம் பிழைகளுக்காக சரிபார்க்கப்பட்டு தரமானதாக்கப் படவேண்டியுள்ளன. ஆவணமாக்கம் எனும் விடயம் இன்னும் எட்டிப் பார்க்கப்படாமலே இருக்கிறது.

இன்னும் அதிக அளவிலான தன்னார்வலர்கள் இதன் பொருட்டு தேவைப்படுகிறார்கள். தாம் விரும்பிப் பயன்படுத்தும் குனு லினக்ஸ் பயன்பாட்டை மொழிபெயர்த்தும் உதவலாம். மேலும் இடை முகப்புகளை மொழிபெயர்க்க தொடங்கிய காலங்களில் கணினிக்கு பழக்கப்பட்டோரில், தமிழ் இடைமுகப்பினை விரும்பி பயன்படுத்துவோர் குறைவாகவே இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. ஓபன் ஆபிஸ், பயர்பாக்ஸ் போன்ற பயன்பாடுகள் தங்களது தொடர்ச்சியான பராமரிப்பிற்கு தகுந்தோரை தேடிக்கொண்டிருக்கின்றன.

ஆயினும் தமிழில் ஆவணங்கள் வேண்டும் எனும் எண்ணமும் விளக்கங்கள் தமிழில் கொடுக்கபடுவது நல்லது எனும் எண்ணமும் அதிகம் தென்படவே அத்தகைய முயற்சிகள் மேற்கொண்டு அதில் தோன்றிய படியே பலனும் கிட்டியதெனலாம். கட்டற்ற
மென்பொருளாலால் ஆன இயங்கு தளமான உபுண்டுவிற்கு தமிழிலேயே ஆதரவு தர வேண்டும், குனு/ லினக்ஸ் இயங்குதளமான அதில் தமிழ் தொடர்புடைய தொழில்நுட்ப விடயங்கள் அலசப்படவேண்டும் எனும் நோக்கில் தொடங்கப்பட்ட உபுண்டு தமிழ்
குழுமமும் எண்ணிய படி நகரத் தொடங்கியுள்ளது.

ஆயினும் தமிழில் ஒருவர் தட்டெழுத விரும்பி தட்டச்சுப் பலகையைப் பார்த்தால் அதில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. ஆங்கில வழி தமிழ் தட்டெழுதும் முறையையே கணினியை தீண்டும் வசதி பெற்றிருப்போர் பின்பற்றுகின்றனர். இது கூடாது என்று இணைய ஊடகங்கள், பொது நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிலை முற்றிலும் மாற அந்த அந்த மாநில மொழி தாங்கிய இரு மொழி விசைப்பலகைகள் புழக்கத்திற்கு வர வேண்டும். இதுவே நாளை அனைவரது இல்லத்திலும் கணினி
வரும் போது, சிறு குழந்தையும் தமிழை தட்டிப் பார்க்க கணினியை எட்டிப் பார்க்கும் போது எளிதாக்கும்.

தமிழில் ஆர்வம் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்தோருக்கும் தடங்களாக இருந்தது / இருப்பது தட்டச்சு பயிற்சி இல்லாமையே ஆகும். மேலும் மொழிப்பெயர்ப்பில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாக விளங்குவது பொதுவான சொற்களை ஏற்படுத்திக் கொண்டு மொழிப்பெயர்ப்பாளர்கள் பயன்படுத்தாது இருப்பது. ஒரே பொருளை உணர்த்தும் இரு வேறு சொற்கள் இருக்கலாம் என்றாலும் தமிழ் இடைமுகப்புகளை ஒருவர் பயன்படுத்த விரும்புகிற போது இவை சிக்கலாகத் தான் இருக்கின்றன. அரசு சார்ந்த சில மொழிபெயர்ப்பு முயற்சிகளும் பணி விரயமாக அமைந்தது வருத்தத்திற்குரியது.

குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அதிக அளவிலான கட்டற்ற மின்னெழுத்துக்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளன. தற்போது இருக்கக் கூடியவை சாதாரண பயன்பாட்டிற்கு போதுமானதாக இருந்தாலும் கலை அம்சம் வாய்ந்த கட்டற்ற
மின்னெழுத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. உபுண்டு போன்ற இயங்குதளங்களில் கிடைக்கும் மின்னெழுத்துக்களும் குறை நிறைந்தவைகளாகவே இருக்கின்றன. இவற்றைக் களைய மின்னெழுத்துப் பயிற்சி வகுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். வருங்காலங்களில் இவை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் டாப்-டாம்-யுனிகோடு என்று பல்வேறு வகை மின்னெழுத்துக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிட வேண்டிய கட்டற்ற பயன்பாடு தேவைப்படுகிறது. மேலும் தட்டச்சுப் பயிற்சி செய்ய உதவும் ஒரு பயன்பாடும் தேவைப்படுகிறது.

உரையை குரலாக மாற்றிட வேண்டிய பணிகள், தட்டெழுதும் போது பிழைகளைச் சொல்லி சரி செய்ய உதவும் ஏற்பாடு, அச்சில் உள்ளவற்றை இனங்கண்டு உரைகளாக மாற்றும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன், உடல் ஊனமுற்றோரும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திட ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓஆர்சிஏ போன்ற பயன்பாடுகள்,
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெர்க்க உதவும் மொழிபெயர்ப்பு கருவிகள் என செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.

மேலும் குநோம், கே பணிச் சூழல் ஆகிய இரண்டிலும் தமிழ்நாட்காட்டி வசதிகள் சேர்க்கப்பட வேண்டியுள்ளன. கணினிகள் மக்களைச் சென்றடையும் வேகத்தைக் காட்டிலும் கையடக்க மொபைல் கருவிகள் வேகமாக சென்றடைந்து விட்டன என்பது
நிதர்சனம். அத்தகைய கருவிகள் கட்டற்ற மென்பொருளை தாங்கியதாக தமிழ் வசதிகள் தருவதாக இருப்பது இல்லை. மொபைல் கருவிகளில் கட்டற்ற தமிழ் வசதிகள் பற்றி ஆர்வம் செலுத்துவோர் தேவை.

மேலும், யாரோ ஒருவர் பயன்பாடுகளை இயற்றுவார் நாம் காலம் முழுவதும் மொழிபெயர்த்துக்கொண்டே இருப்போம் எனும் நிலை போய் நாமே நமக்குத் தேவையான மென்பொருளை இயற்றுவதோடு பெரிய/ முக்கியத் திட்டங்களுக்கு நம்மிடமிருந்தும் பங்களிப்புகள் வர வேண்டும்.

விக்கிபீடியா, விக்சனரி, கணிமொழி உள்ளிட்ட விடயங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இவையெல்லாம் தமிழில் செய்ய வேண்டும் என்பது ஒரு மலை. கட்டற்று செய்ய வேண்டும் என்பது இன்னொரு மலை. அடிவாரம் தென்படுகிறது.
ஏறத் துவங்க வேண்டும். ;-) கட்டற்று இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தமையால் “கட்டற்ற மென்பொருள்” என்ற பெயரில் ரிச்சர்டு எம் ஸ்டால்மேன் அவர்களின் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.

இங்கே எம்மால் விடுபட்டிருக்கக் கூடிய தங்கள் கற்பனையில் உள்ள தமிழ் சார்ந்த கட்டற்ற மென்பொருள் திட்டம் ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும்.

Written by amachu

December 6th, 2008 at 7:14 pm

பொதிகளை நாம் மேலாண்மை செய்கிறோமா அல்லது அவைகள் நம்மை மேலாண்மை செய்கின்றனவா ??

with one comment

பொதிகளை நாம் மேலாண்மை செய்கிறோமா அல்லது அவைகள் நம்மை மேலாண்மை

செய்கின்றனவா ??

பொதிகளின் பயன்பாடு குறைந்துக்கொண்டே இருந்த போதிலும் அவைகளை ஒட்டு மொத்தமாக

கணினியில் கையாளும் போது சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே கணினியில்

நிறுவப்பட்டுள்ள பொதிகள் தொடர்பான தகவல்களை சேமித்து நிர்வகிக்க ஏற்றவாறு செய்யலாம். ஒரு

சில பொதிகள் மற்ற பொதிகளை சார்ந்திருப்பதால், நிறுவும்பொருட்டும் மற்றும் கையாளும்பொருட்டும்

பொதிகளுக்கிடையே உள்ள தொடர்புடைய தகவல்களை சேமித்து வைத்தல் நல்லது.

பொதிகளே இயங்குதளத்தின் முன்னோடியாகும்

ஒரு கணினியை பார்க்கும் போது அது பல பொதிகள் ஒருங்கிணைந்து தோற்றமாகும்.ஒவ்வொரு காலம்

மாற மாற தனிப்பட்ட சில செயல்களானது பொதிகளின் மீது நடத்தப்படுகிறது.

** புது போதிகள் நிறுவப்படும் போது - தினந்தோறும் செய்யப்படும் வேலைகளுக்கு பயன்பாடும்

ஆப்பிஸ் போன்ற மென்பொருள் மற்றும் புதிய விளையாட்டு மென்பொருள் () அந்த பொதிகள் நமக்கு

தேவைப்படும்பொருட்டும்

** பழைய பொதிகள் புதுப்பிக்கும் போது - தினந்தோறும் செய்யப்படும்.வேலைகளுக்கு பயன்பாடும்

ஆப்பிஸின் புதிய வெளியீட்டை மேம்படுத்துதல் () பழைய பதிப்பை நீக்கி புதிய வேளியீட்டை

நிறுவுதல்.

** பொதிகளை முழுமையாக நீக்கும் போது - நினைவுப்பகுதியை சிக்கனமான வகையில் பயன்படுத்தும்

பொருட் தேவையற்ற பொதிகளை நீக்குதல்.

இந்த மாதிரியான பணிகளை செய்யும் போது தகவல்கள் இலக்க நேரிடலாம். பொதிகள் பற்றிய

தகவல்களை பாதுகாத்து வைத்து தெறிவித்தால் எப்படி இருக்கும் ??

பொதிகள் பற்றிய தகவல்களை பாதுகாத்தல்

போதிகளின் மீது நிகழ்த்தப்படும் செயல்களுக்கு ஒரு அர்த்தம் வேண்டும், எனவே தான் கணினியில்

பொதிகள் நிறுவுதளை எளிதாக்க, ஒரு சில தகவல்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய தேவைப்படும்

தகவல்கள் கீழ்வருமாறு,

** எந்தெந்த பொதிகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன பார்த்தல். சில மாதங்களுக்கு முன் கற்றது தமிழ்

என்ற பொதியை நிறுவ முயன்றிருப்போம் - அதை அறிய

** ஒரு பொதியைப் பற்றிய முழு விவரம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா இருக்கும்,

மற்றும் எப்போதோ நிறுவப்பட்ட பொதி மற்றும் அதைச்சார்ந்த கோப்புகள் பற்றிய தகவல்கள்

தேவைப்படும் போதும்

** ஒரு கோப்பானது எந்த பொதியை சார்ந்தது என்பதை அறியும் பொருட்டு

** ஒரு பொதியானது நிறுவப்பட்ட பின்னர் அதைகச்சார்ந்த கோப்புகளில் மாற்றம் செய்யப்பட்டால்

அதைப் பற்றி அறியவும் பயன்படுகிறது. இதை வைத்துக்கொண்டு கனிணியில் நடந்துள்ள மாற்றங்கள்

மற்றும் தொலைந்த கோப்புகளை கண்டுபிடித்துவிடலாம்.

** கோப்பில் சேமிக்கப்பட்ட கட்டமைப்பு(Configuration) தகவல்கள் () அதில் எதாவது மாற்றம்

செய்யப்பட்டருந்தாலோ மிகவும் எளிதில் கணடுபிடித்துவிடலாம்.

பொதி மேலாண்மைனா என்னா :) அதை எப்படி செய்வது?

எப்படி? பொதிகளை எளிதில் நிறுவுதல், புதுப்பித்தில் மற்றும் நீக்குவது; பொதிகள் பற்றிய தகவல்களை

எப்படி வெவ்வேறு வழிகளில் கணினியில் இருந்து எடுத்துச்சொல்லுவது; மேலும் கட்டமைப்பு(config

files) கோப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்புபடுத்தி சேமித்து தெறிவிப்பது.

மேற்கூறப்பட்ட அனைத்து பணிகளையும் கணினியே பார்த்துக்கொண்டால் எவ்வளவு எளிதாக இருக்கும்.

அதனால் தான் பல குழுமங்கள் பொதி மேலாண்மை பணிக்கான மென்பொருட்களை செய்ய முயன்றன.

  1. சில பொதி மேலாண்மை மென்பொருட்கள் பொதிகளை கையாளும்பொருட்டு சில குறிப்பிட்ட

    வழிமுறைகளை பயன்படுத்துகிறது.

  2. மற்ற பொதி மேலாண்மை மென்பொருட்கள் பொதிகளை கையாளும்பொருட்டு கோப்புகளை

    தொடர்புபடுத்தி அதைக் கருத்தில் கொண்டு செயல்படுகின்றன.

மேற்கண்ட ஒவ்வொரு முறையும் பொதி மேலாண்மையை தன் வசம் இலுக்க வந்தவைகளாகும்.இங்கு

மேற்குறிப்பிட்ட வரியில் பொதியை நிறுவியப்பின்னர் நீக்க இயலாது அதுமட்டும் இல்லாமல் பொதி

பற்றிய தகவல்களை அறிய வழியே இல்லை.

ஆனால் இரண்டாவது முறை மூலம் பொதிகளை நீக்கவும், அதைப்பற்றிய தகவல்களையும் அறிய

முடியும்.இம்முறையில் நன்கு வரையருக்கப்பட்ட கட்டளை வரிகளை நிறுவும் பொருட்டு இயக்க

முடியாது

எந்வொரு பொதி மேலாண்மை மென்பொருளும் மேற்கண்ட இரண்டையும் கலந்து எழுதப்பட வேண்டும்

. எனவே பயனர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு அமைக்கப்படும் எந்தவொரு மென்பொருளும்

வரவேற்ப்பை பெரும்

ரெட் ஹாட் பொதி மேலாண்மையின் முன்னால் இருந்தவைகள்

ரெட் ஹாட் பொதி மேலாண்மை வரக் காரணமாக இருந்த மென்பொருட்களான ஆர்பிபி(RPP),

பிஎம்எஸ்(PMS), பிஎம்(PM) போன்றவற்றை பற்றி காண்போம்

–தொடருமில்ல

Written by Thangam Arun

September 23rd, 2008 at 8:16 am

அறிவியலுக்கு உதவும் லினக்ஸ்

without comments

ஐரோப்பிய அணு ஆய்வு மையத்தில்(CERN) அனைத்து கணினிகளும் குனு/லினக்ஸ் இயங்கு தளத்திலேயே இயங்குகின்றன. அம்மையத்தின் புதிய கருவியான Large Hadron Collider(LHC) ஐ கட்டுப்படுத்தும் கணினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பார்த்தாலே தெரிகிறது, அதில் தெரியும் சாளரம் KDEஇல் இயங்குகிறது என்பது.

மேலும் புகைப்படங்களுக்கு:
http://www.spiegel.de/fotostrecke/fotostrecke-35141-3.html
http://www.bbc.co.uk/radio4/bigbang/gallery.shtml?select=13

Written by அகிலன்

September 16th, 2008 at 3:41 pm

மொபைல் இணையக் கருவி…

without comments

நண்பர்களுடன் யாஹூவிலோ ஸ்கைப்பிலோ கதைத்துக் கொண்டிருக்கிறீகள். வேலைக்குக் கிளம்ப நேரமாகிவிட்டது. பேருந்தைப் பிடித்தாக வேண்டும். “catch you later” என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறீர்கள். ஆனாலும், மனதில் ஒரு சின்ன ஆசை: பேருந்தில் அலுவலகம் போய்ச் சேர்வதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்.
இந்த ஒரு மணி நேரத்தில் இன்னும் கொஞ்சம் கதைக்கலாமே என்று ஆசைப்பட்டதுண்டல்லவா? உங்கள் ஆசையை நிறைவேற்ற வந்துவிட்டது ‘மிட்’ என அழைக்கப்படும் ‘மொபைல் இணையக் கருவி’ (Mobile Internet Device a.k.a. MID).

இது இன்டெல் நிறுவனத்தாரின் சமீபப் படைப்பு. ‘Intel® Centrino® Atom™ தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டவை இந்த மிட்கள். இன்று இணையம் இல்லாத இடமே இல்லை எனலாம். அங்கிங்கெனாதபடி – கல்வி, பொழுதுபோக்கு, தொழில் என எல்லா இடங்களிலும் பரவி நிற்கிறது இணையம். இணையம் இல்லாவிட்டால் உலக இயக்கம் நின்றுவிடும் அளவுக்கு அது வியாபித்து நிற்கிறது. நாம் நடமாடும் போதும் இணைய வசதியை பெற செல்பேசி மூலமாக பெறுவதற்கு இன்று பல கருவிகள் உள்ளன. உதாரணமாக – ஆப்பிளின் ஐஃபோன், ரிம்-மின் ப்ளாக்பெர்ரி, நோக்கியாவின் N800 முதலியன. இவை, ARM தொழில்நுட்பத்தினால் செய்த கருவிகளாதலால் ரிச் இன்டெர்நெட் எனப்படும் செழித்த இணையத்தை இவை மூலமாக ACCESS செய்ய இயலாது.

அதாவது, நாம் ஒரு கணிணியில் யாஹூ தளத்தைப் பார்க்கிறோமென்றால் அதே தோற்றத்தில் நாம் ஆப்பிள் ஐஃபோனில் காண இயலாது. தோற்றம் மிகவும் வேறுபட்டிருக்கும். மேலும் – RSS, javascript, flash(*) உள்ள பக்கங்களை சரியாகப் பார்க்க முடியாது. மேலும், adobe reader, Google Talk, Skype, Adobe Flash player முதலியவற்றை இந் நிறுவனங்கள் (ஆப்பிள், ரிம், நோக்கியா) ARMக்கு பெயர்ப்பதற்கு (port) செய்வதற்கு பெரும் செலவு செய்கின்றன. ஆதலால் இந்தக் கருவிகளின் விலையும் மிகவும் அதிகம்.

இந்தக் குறைகளைப் போக்குவதற்காக இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த சாதனம் தான் இந்த மிட். இது இன்டெல் x86 கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதால் மேற்க்கண்ட பயன்பாடுகளை (applications) பெயர்க்கத் செய்யத் தேவையில்லை. உபயோகிப்போர் கணினியில் எவ்வெவ் பயன்பாடுகளையெல்லாம் பயன்படுத்துகிறாரோ அவ்வவ் பயன்பாடுகளையெல்லாம் ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே பயன்படுத்தலாம். தேவையான பயன்பாடுகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தலாம்.

போகுமிடமெல்லாம் கொண்டு செல்லத்தக்க வழியில் அதிக கனமில்லாததாக வடிவமைக்கப் பெற்றுள்ளது இதன் சிறப்பம்சம். மிகவும் குறைந்த மின்சக்தியைக் கொண்டு இயங்குவது ஆட்டம் (atom) இயக்கிகள் (processors). இதனால், முழுவதும் பலனூட்டப்பட்ட (charged) செய்த மிட்களை 6 முதல் 8 மணி நேரம் வரைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். சிறிய, அதே நேரத்தில் கச்சிதமான QWERTY விசைப்பலகை இணைக்கப்பட்டுள்ளதால் மிகவும் சுலபமாக மின்னஞ்சல், ஆவணங்களை தட்டச்சு செய்யலாம். எலியத்திற்கு பதிலாக தொடு திரையிருப்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்.

இப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்கு தளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. லினக்ஸ் மிட்கள் உபுண்டு லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட ‘மொப்லின்’ மற்றும் ரெட் ஃபாலாக்ன் ‘மிடினக்ஸ்’ லினக்ஸில் இயங்குகிறது. (http://www.ubuntu.com/products/mobile) இவற்றில் யூ.ஐ. ஆப்பிள் ஐபோனைப் போன்றே கவர்ச்சிகரமாக உள்ளது. மற்ற லினக்ஸ்களுக்கு உள்ளது போன்றே ‘மொப்லின்’க்கும் மிகப்பெரிய கம்யூனிட்டி உள்ளது. நாமும் நம்முடைய பயன்பாடுகளை சமர்ப்பிக்கலாம். வெப் முகவரி: http://www.moblin.org

இன்டல் மற்றும் இன்டல் ஓவம் ஆகியன யுனைடட் ஸ்டேட்ஸ் மற்றும் இதர நாடுகளில் இன்டல் நிறுவனத்தார் அல்லது அதன் துணை நிறுவனங்களின் வர்த்தக முத்திரை அல்லது பதிவு பெற்ற வர்த்தக முத்திரை ஆகும். * ஏனைய பெயர்களும் அடையாளப் பெயர்களும் பிறரால் தங்களது உரிமைப்பொருளாக கோரப் பெறலாம். Intel(R) Centrino(R) Atom(TM)

Written by srirudran

July 16th, 2008 at 4:30 am

கெட்டெக்ஸ்ட் அறிமுகம்…

with one comment

குறிப்பு: இக்கட்டுரையை வாசிக்க நிரலாக்க முன்னனுபவம் இருப்பது நல்லது.

பெரும்பாலான கணிப்பொறி செய்நிரல்கள் ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கில மொழி தெரிந்தவர் குறைவு. அதனால் செய்நிரல்கள் தமிழ் போன்ற நம்நாட்டு மொழியை பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குனு லினக்ஸில் உள்ள பெரும்பாலான செய்நிரல்கள் ஆங்கில மொழி அல்லாத மற்ற மொழிகளையும் கையாளும் விதத்தில் எழுதப்பட்டவை. அதனால் மிக எளிதில் மற்ற மொழிக்கு மொழிபெயர்த்து விடலாம்.

இந்த பகுதியில் எவ்வாறு ஒரு நிரலை பல மொழிகளை கையாளும் விதத்தில் எழுதுவது என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் குனு லினக்ஸ் கணிபொறியில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்:

  • சி மொழியாக்கி/தொகுப்பி
  • Gettext
  • தமிழ் எழுத்துரு
  • இப்போது நாம் செய்ய வேண்டியவற்றை படிப்படியாக பார்ப்போம்

    சி மொழியில் Gettext தனைப் பயன்படுத்தி ஒரு நிரல்

    /* கோப்பின் பெயர்: sample.c */
    #include <stdio.h>
    #include <stdlib.h>
    #include <locale.h>
    #include <libintl.h>
    /* gettext-க்கு உதவ */
    #define _(String) gettext(String)
    #define gettext_noop(String) (String)

    main(){

    char message[] = gettext_noop(“Language”);

    /* பழைய குறிப்பை நீக்கு */
    setlocale(LC_ALL, “”);
    setlocale(LC_TIME, “” );
    setlocale(LC_MESSAGES, “”);

    /* MO கோப்பின் பெயர் */
    bindtextdomain( “sample”, “/usr/share/locale/” );
    textdomain( “sample” ) ;

    printf(“\n Output: %s \n”, _(message) );
    }

    இந்த சி நிரலை கம்பைல் செய்து sample என்ற கோப்பில் காக்கவும்.

    $ gcc sample.c -o sample

    நிரலில் இருந்து வார்த்தை பிரித்து எடு

    $ xgettext -o sample.po sample.c

    இந்த கட்டளை நிரலில் உள்ள வார்த்தை பிரித்து எடுத்து தனியாக sample.po என்ற கோப்பாக சேமிக்கும். இது சாதாரண கோப்பு அதனால் இதை எந்த ஒரு எடிடரிலும் திறக்கலாம்.

    #: sample.c:11 — கோப்பின் பெயர், வரி எண்
    msgid “Language” — இது ஆங்கில சொல்
    msgstr “” — இங்கு மேலே உள்ள சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தையை நுழைக்க வேண்டும்.

    #: sample.c:11
    msgid “Language”
    msgstr “தமிழ்”

    MO கோப்பாக மாற்று

    நிரல்கள் வேலை செய்யும் பொது தேடுதலை எளிமையாக்க PO கோப்பை MO கோப்பாக மற்ற வேண்டும்.

    $ msgfmt -o sample.mo sample.po

    MO கோப்பை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். இந்த இடத்தில் வைக்க ரூட் அனுமதி தேவை.

    # cp sample.mo /usr/share/locale/ta_IN/LC_MESSAGES/
    அல்லது
    # cp sample.mo /usr/share/locale/ta/LC_MESSAGES/

    நிரலை இயக்கு

    $ ./sample

    Output: Language

    மொழியை மாற்று

    $ export LANG=ta_IN

    மறுபடியும் நிரலை இயக்கு

    $ ./sample

    Output: தமிழ்

    இப்படி தான் ஒரு நிரலை பல மொழிகளை கையாளும் விதத்தில் எழுத வேண்டும். இது ஒரு சிறிய பகுதியே இ தைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.
    http://www.gnu.org/software/gettext/manual/gettext.html

Written by bharathi

May 14th, 2008 at 5:00 am

எம்பி3 கோப்புகள் இசைக்க…

without comments

எம்பி3 இசை வடிவ ஆதரவு ஏன் இயல்பாக கிடைக்கப் பெறாது?

கணினியில் திரை இசை பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு இசைகளை எம்பி3 கோப்புகளாகவே பார்த்து பயன்படுத்தி இசைத்து பலருக்கும் பழக்கமாகியிருக்கும். பொதுவாக இன்று பிரபலமாக கிடைக்கப் பெறும் குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் இயல்பிருப்பாக எம்பி3 கோப்புகளை இசைப்பதற்கான ஆதரவு இருக்காது. எம்பி3 படைப்புரிமங்களால் கவரப்பெற்ற கட்டுப்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாகும். சில நாடுகளில் அதனை பயன்படுத்த சட்டம் அனுமதிக்கலாம். சில நாடுகளில் அனுமதி இல்லாது போகலாம். ஆகையால் குனு லினக்ஸ் இயங்கு தள தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இதற்கான ஆதரவு பெரும்பாலும் இயல்பிருப்பாக கிடைக்காது.

கட்டற்ற ஓஜிஜி இசை வடிவம்

எம்பி3க்கு மாற்றாக கட்டற்ற மென்பொருள் உலகில் பவனி வரும் இசை வடிவத்திற்கு ஆக் அல்லது ஓஜிஜி என்று பெயர். இவ் வடிவத்திற்கான ஆதரவினை அனைத்து குனு லினக்ஸ் இயங்குதளங்களும் இயல்பாகவே அளிக்கின்றன. இதன் தரமும் எம்பி3க்ககு நிகரானதென்றால் மிகையாகாது.

மேலும் எம்பி3 கோப்புகளை ஆக் கோப்பாக மாற்றுதற்கும் பயன்பாடுகள் உள்ளன. அடாசிடி அத்தகைய பயன்பாடுகளில் குறிப்பிடத் தக்க ஒன்று. மேலும் பதிவொலி வட்டொன்றை தாங்கள் கணினிக்குள் இட்டால் குநோம் இடைமுகப்பு கொண்ட இயங்கு தளங்களில் ஆடியோ சிடி ரிப்பர் எனும் பயன்பாடு துவக்கப்பட்டு அதிலுள்ள கோப்புகளை வெளிக்கொணர்ந்து ஆக் வடிவத்தில் காத்து தரும்.

அதெல்லாம் வேண்டாம் எம்பி3 தான் கேக்கணுமா?

பொதுவாக ஜிஸ்ட்ரீமரை பின்பலமாக கொண்டு இயற்றப்பெற்ற ஊடக இயக்கிகளில் ஜிஸ்ட்ரிமர் அளிக்கும் கூடுதல் செருகு பொதிகளை நிறுவிடின் ஒருவரால் எம்பி3 கோப்புகளை குனு லினக்ஸ் இயங்குதளங்களில் இசைக்க இயலும். இச் செருகிகளுக்கு gstreamer-plugins-ugly மற்றும் gstreamer-plugins-bad எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றை தாங்கள் பயன்படுத்தும் இயங்குதளங்களுக்கு ஏற்ற நிறுவற் பயன்பாடுகளைக் கொண்டு நிறுவிக் கொண்டால் தங்களால் எம்பி3 கோப்புகளை கேட்க இயலும்.

ஆகிசையை ஆதரித்து ஒரு வலைப்பதிவு: http://amachu.net/blog/?p=3

Written by amachu

April 14th, 2008 at 4:30 am