Archive for November, 2009
விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு அறிமுக நிகழ்ச்சி
கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு நாள் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி நிர்வாகம் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுக நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியானது சென்னை, பெரம்பலூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய இரண்டு பகுதிகளிலுள்ள விவேகானந்தா பள்ளிகளில் நடப்பெற்றது.
சென்னையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியில் பங்கு கொண்டதுடன் உபுண்டு பற்றிய அறிமுகத்தையும் பற்றி அறியும் வாய்ப்பை பெற்றனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை லினக்ஸை வட்டு மூலம் எப்படி இயக்குவது மற்றும் எப்படி நிறுவுவது என்பது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
மேலும் உபுண்டுவில் உள்ள கல்விக்கான மென்பொருள்கள் மூலம் எப்படி அன்றாடம் பாடங்களை படித்து பயன்பெறுவது என்பது பற்றியும் அறிமுகம் செய்து காட்டப்பட்டது. +2 மாணவர்கள் சிலருக்ககு உபுண்டுவில் “C” மூலம் நிரல்கள் எழுதுவது பற்றியும் அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. பின்னர் உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் எழுதி வழங்கப்பட்டன.

uabuntu-demo
இந்நிகழ்ச்சி மூலம் பள்ளிகளுக்கு என்று தனி வட்டு ஒன்றை உருவாக்கவும் உபுண்டு தமிழ் குழுமம் முடிவு எடுத்துள்ளது, அதை வருங்கால நிகழ்ச்சியிகளில் வழங்கப்படும். மேலும் இதுபோன்ற பள்ளி நிகழ்ச்சிகள் மூலம் கட்டற்ற மென்பொருள் அனைவரையும் சென்றடைய செய்தமைக்கு விவேகானந்தா பள்ளி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.
நிகழ்ச்சி இனிதே நடந்திட தன்னார்வத்துடன் முன்வந்து பங்களித்து உதவி புரிந்தமைக்கு இரவிச்சந்திரன், ஸ்ரீதர் – சுதேசிய இயக்கத்திற்கும், இராஜி, பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் – உபுண்டு தமிழ் மற்றும் லினக்ஸ்-பயனர்- குழுமத்திற்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களை கான இங்கே செல்லவும்.
