உபுண்டுவில் தமிழ்99 – ஸ்கிம் பயன்படுத்தி..
அனுமானங்கள்
- உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது.
- ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டு பயனர் உபுண்டுவை நிறுவியுள்ளார்.
- அமர்வின் மொழியும் ஆங்கிலமாகவே இருக்கப் போகிறது.
- ஸ்கிம் பயன்பாடு கொண்டு தமிழ்99, பொனடிக் உள்ளிட்ட வழிகளில் தமிழில் தட்டெழுத விரும்புகிறார்.
- பயனர் இணைய வசதி பெற்றிருக்கிறார்.
வழிமுறை
- உபுண்டு 8.10 நிறுவிய கையோடு System –> Administration –> Synaptic Package Manager துவக்கவும்.
- அதில் தேடுதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள களத்தில் scim-m17n எனக் கொடுத்து தேடப்பட்ட அப்பொதி திரையில் தோன்றியதும் நிறுவிடும் பொருட்டு அதனைத் தேர்வு செய்யவும். பின்னர் வலது புறமாக எலியத்தினைச் சொடுக்கி Mark for Installation கொடுக்கவும். கீழ்காணும் காட்சிப்பதிவு தங்களுக்கு துணைபுரியும்.
- Apply தட்டினால் இணையத்திலிருந்து scim-m17n உடன் அது சார்ந்த பிற பொதிகளும் பெறப்பட்டு நிறுவப்படும். இது தமிழ் விசைப்பலகைகளுக்கான ஸ்கிம் அட்டவணைகளை நிறுவித் தரும்.
- பின்னர் ஒவ்வொரு அமர்விலும் ஸ்கிம்தானாகவே துவக்கப்பட்டு அனைத்து பயன்பாடுகளிலும் பயன்படுத்தப் பட ஏதுவாக முதற்கண் Alt-F2 கொடுத்து மேலெழும்பும் சாளரத்தில் gksudo gedit /etc/profile கொடுக்கவும். நிர்வாகப் பணியாகையால் கடவுச் சொல்லினை இடும் படி கோரப்படுவீர்கள். இது தங்கள் பயனர் பெயரோடு தொடர்புடைய கடவுச் சொல்லே!
- பின்னர் ஜிஎடிட் கொண்டு துவக்கப்பெறும் கோப்பின் அடிப்பகுதிக்கு பயணித்து கீழ்காணும் வரிகளை உள்ளிடவும்.
# SCIM
export XMODIFIERS=’@im=SCIM’
export GTK_IM_MODULE=”scim”
export XIM_PROGRAM=”scim -d”
export QT_IM_MODULE=”scim”
scim -d
கீழ்காணும் காட்சிப்பதிவு தங்களுக்கு துணை புரியும். - தற்போதைய அமர்விலிருந்து வெளியேறி புதிய அமர்வினைத் துவக்கவும்.
- உரையாக்கப் பயன்பாடான ஜிஎடிட் தனை Applications –> Accessories –> Text Editor கொண்டு துவக்கியபின் Ctrl+Space தட்டினால் ஸ்கிம் தூண்டப்படும்.
- திரையின் வலது கீழ்புறம் தோன்றும் ஸ்கிம் தட்டியினைத் தட்டி தமிழ் மொழியில் தாங்கள் விரும்பும் தட்டச்சு முறையை தேர்வு செய்யுங்கள். தமிழ் டைப்ரைட்டர் முறை தேர்வு செய்யப்பட்டிருப்பதை கீழ்காணும் காட்சிப்பதிவு உணர்த்துகிறது.
- இனியென்ன தங்களுக்கு தெரிந்த தமிழ் தட்டச்சு முறையில் தட்டுங்க தட்டுங்க தட்டெழுதிக்கிட்டே இருங்க………
- இம்முறையைப் பின்பற்றினால் தமிழ்99, தமிழ் தட்டச்சு, பொனடிக், இன்ஸ்கிரிப்ட், ஐடிரான்ஸ் ஆகிய தட்டெழுதும் முறைகளில் தங்களால் தமிழில் உள்ளிட இயலும்.





ஐயா,
தமிழ் 99 முறைப்படி unicode எழுத்துக்களை எப்படித் தட்டுவது என நான் வேண்டி நின்ற சில மணித்துளிகளில் தங்கள் உதவி ஓடி வந்து சேர்ந்துவிட்டது.
நன்றி! நன்றி!! நன்றி!!!
ப. இராசமோகன்.
ப. இராசமோகன்
7 Dec 08 at 9:02 pm
[...] ஆமாச்சுவின் உபுண்டுவில் தமிழ் 99 பற்ற
உபுண்டு 9.04 ல் தமிழ் 99
17 Sep 09 at 9:22 pm
இடுகை பயனளித்தது, நன்றி!
ஓப்பன் ஆபீஸ் செயலியில் (உபுண்டு 9.10) மெய்யெழுத்துப் புள்ளிகள்,
இராதாகிருஷ்ணன்
20 Nov 09 at 3:22 am
உகர, ஊகார எழுத்துக்கள் பிரிந்து வருவதை எங்ஙனம் சரி செய்வதென்று அறியத்தரவும்.
இராதாகிருஷ்ணன்
20 Nov 09 at 3:25 am
ஆகா! அருமை. லினக்ஸ் உபுண்டுவிற்கும், அதற்காக தோள் கொடுக்கும் அருமை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ் யூனிகோட்டில் வேலை செய்ய முடிகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
veejay
24 Dec 09 at 6:53 pm
மிக்க நன்றி! உபுணுட்டுவில் தமிழில் தட்டச்சு செய்ய இயலாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்! பிரச்சனை தற்பொழுது தீர்ந்தது.
இவன்
1 Jan 10 at 6:07 am
Siŗ,
thanks, very interesting, now have to make it useful for me and family.
have not started typing in tamil – know only english typing – will start practicinġ
Is there any keyboard available in Tamil (in shops) in chennai – I know the virtual / on screen keyboard is available.
thanks once again
s. sivakumar
18 Jul 10 at 9:25 am