உபுண்டுவில் தினமணி தினத்தந்தி வாசிப்பது எப்படி (அ) புதிய மின்னெழுத்துக்கள் சேர்ப்பது எப்படி?
தினமலர் உள்ளிட்ட நாளேடுகள் யுனிகோடினைப் பயன்படுத்துவதால் அதன் செய்திகளை வாசிப்பதில் இயல்பாக உபுண்டுவில் சிக்கல் இருக்காது.
தினமணி – தினத்தந்தி ஆகியன யுனிகோடுக்கு இன்னும் மாறாது இருப்பதால் சிக்கல் நிலவுகிறது.
இவ்விரண்டு நாளேட்டையும் ஒழுங்காக வாசிக்க அவை தரும் மின்னெழுத்துக்களை நிறுவிப் பயன்படுத்திடல் வேண்டும்.
தினமணிக்கான மின்னெழுத்தைப் பதிவிறக்க: http://www.dinamani.com/fonts/tmnews.ttf
தினத்தந்திக்கான மின்னெழுத்துக் கிடைக்குமிடம்: http://dailythanthi.com/fontdownload/Eltpan-n.ttf
இரண்டு மின்னேழுத்துக்களையும் பதிவிறக்கிக் கொள்ளவும். இயல்பாக இவைத் தங்கள் Desktop அடைவிற்குள் இறங்கும். உபுண்டுவில் இரண்டு விதமாகத் தாங்கள் மின்னெழுத்துக்களைச் சேர்க்கலாம்.
- தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக – இம்முறையில் சேர்க்கப்படும் மின்னெழுத்தின் தாக்கம் அனைத்துப் பயனர்களுக்கும் இராது சேர்த்துக்கொண்ட பயனருக்கு மாத்திரமே கிட்டும்.
- அனைவருக்கும் – அனைவருக்கும் பயன்படும் வண்ணம் மின்னெழுத்தைச் சேர்ப்பது.
நாம் தினமணி மின்னெழுத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் தினத்தந்தி மின்னெழுத்தை அனைவரது பயன்பாட்டிற்காகவும் சேர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மின்னெழுத்தைப் பயன்படுத்துதல் – தினமணி
- தனிப்பட்ட பயன்பாடு என்கிறபோது அமர்வின் பயனர் தனக்கென்று ஒரு மின்னெழுத்தைப் பயன்படுத்தப் போகிறார். இதற்கு அவருடைய இல்ல அடைவில் .fonts என்றொரு அடைவு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
- Places –> Home Folder தேர்வு செய்து Ctrl + H கொடுத்தால் மறைக்கப்பட்டிருக்கும் அடைவுகளும் சேர்த்துக் காட்டப்படும். File –> Create Folder கொடுத்து அதனால் உருவாகும் அடைவிற்கு .fonts என்று பெயரிடவும்.
- Applications –> Accessories –> Terminal தொடங்கவும். டெஸ்க்டாப்பில் பதிவிறக்கப்பட்ட தினமணி வாசிப்பதற்கான மின்னெழுத்தை நாம் முந்தைய படியில் உருவாக்கிய .fonts அடைவிற்குள் இட வேண்டும். அதற்கு,
$ cp Desktop/tmnews.ttf .fonts/
மாற்றங்கள் நிலை பெற வேண்டி கீழ்காணும் ஆணையிடவும்.
$ fc-cache -f -v .fonts
தங்களது பயர்பாக்ஸை மூடி விட்டு மீண்டும் துவங்கவும். தினமணி தளத்தைப் பார்வையிடவும்.
அனைவரது பயன்பாட்டிற்காகவும் மின்னெழுத்தை சேர்த்தல் – தினத்தந்தி
- தினத்தந்தி மின்னெழுத்தை பதிவிறக்கிக் கொள்ளவும்.
- Alt-F2 கொடுத்து தோன்றும் சாளரத்தில் gksu nautilus /usr/share/fonts/truetype என்று கொடுக்கவும்
- கடவுச் சொல் கோரப்படும் போது கொடுக்கவும்.
- தோன்றும் சாளரத்தில் File –> Create Folder கொடுத்து அவ்வடைவிற்கு myfonts எனப் பெயரிடவும்.
- myfonts அடைவிற்குள் பயணித்து பணிமேசையில் (Desktop) இருக்கும் மின்னெழுத்தை (Eltpan-n.ttf) இழுத்துப் போடவும் (Drag & Drop).
- முனையத்தைத் துவக்கவும்.(Application –> Accessories –> Terminal)
- sudo fc-cache -f -v /usr/share/fonts/truetype/myfonts/ ஆணையிடவும்.
- பயர்பாக்ஸை மூடி விட்டு மீண்டும் திறந்து தினத் தந்தி தளத்திற்கு பயணிக்கவும்.







There is problem downloading
http://www.dinamani.com/fonts/tmnews.ttf
Krishnamurthy GovindaReddy
15 May 09 at 7:57 am
தினமணி யுனிகோடிற்கு மாறி வெகு காலமாகிறது.
வாசகன்
27 Jun 09 at 5:03 pm
[...] தொடர்ந்து வாசிங்கள் ……….. [...]
உபுண்டுவில் தினமணி தினத்தந்தி வாசிப்பது எப்படி (அ) புதிய மின்னெழுத்துக்கள் சேர்ப்பது எப்படி? &l
10 Sep 09 at 4:36 pm
good,very nice guide
murthy
22 Nov 09 at 4:38 pm