பொதிகளை நாம் மேலாண்மை செய்கிறோமா அல்லது அவைகள் நம்மை மேலாண்மை செய்கின்றனவா ??
பொதிகளை நாம் மேலாண்மை செய்கிறோமா அல்லது அவைகள் நம்மை மேலாண்மை
செய்கின்றனவா ??
பொதிகளின் பயன்பாடு குறைந்துக்கொண்டே இருந்த போதிலும் அவைகளை ஒட்டு மொத்தமாக
கணினியில் கையாளும் போது சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே கணினியில்
நிறுவப்பட்டுள்ள பொதிகள் தொடர்பான தகவல்களை சேமித்து நிர்வகிக்க ஏற்றவாறு செய்யலாம். ஒரு
சில பொதிகள் மற்ற பொதிகளை சார்ந்திருப்பதால், நிறுவும்பொருட்டும் மற்றும் கையாளும்பொருட்டும்
பொதிகளுக்கிடையே உள்ள தொடர்புடைய தகவல்களை சேமித்து வைத்தல் நல்லது.
பொதிகளே இயங்குதளத்தின் முன்னோடியாகும்
ஒரு கணினியை பார்க்கும் போது அது பல பொதிகள் ஒருங்கிணைந்து தோற்றமாகும்.ஒவ்வொரு காலம்
மாற மாற தனிப்பட்ட சில செயல்களானது பொதிகளின் மீது நடத்தப்படுகிறது.
** புது போதிகள் நிறுவப்படும் போது - தினந்தோறும் செய்யப்படும் வேலைகளுக்கு பயன்பாடும்
ஆப்பிஸ் போன்ற மென்பொருள் மற்றும் புதிய விளையாட்டு மென்பொருள் (அ) அந்த பொதிகள் நமக்கு
தேவைப்படும்பொருட்டும்
** பழைய பொதிகள் புதுப்பிக்கும் போது - தினந்தோறும் செய்யப்படும்.வேலைகளுக்கு பயன்பாடும்
ஆப்பிஸின் புதிய வெளியீட்டை மேம்படுத்துதல் (அ) பழைய பதிப்பை நீக்கி புதிய வேளியீட்டை
நிறுவுதல்.
** பொதிகளை முழுமையாக நீக்கும் போது - நினைவுப்பகுதியை சிக்கனமான வகையில் பயன்படுத்தும்
பொருட் தேவையற்ற பொதிகளை நீக்குதல்.
இந்த மாதிரியான பணிகளை செய்யும் போது தகவல்கள் இலக்க நேரிடலாம். பொதிகள் பற்றிய
தகவல்களை பாதுகாத்து வைத்து தெறிவித்தால் எப்படி இருக்கும் ??
பொதிகள் பற்றிய தகவல்களை பாதுகாத்தல்
போதிகளின் மீது நிகழ்த்தப்படும் செயல்களுக்கு ஒரு அர்த்தம் வேண்டும், எனவே தான் கணினியில்
பொதிகள் நிறுவுதளை எளிதாக்க, ஒரு சில தகவல்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய தேவைப்படும்
தகவல்கள் கீழ்வருமாறு,
** எந்தெந்த பொதிகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன பார்த்தல். சில மாதங்களுக்கு முன் “கற்றது தமிழ்“
என்ற பொதியை நிறுவ முயன்றிருப்போம் - அதை அறிய
** ஒரு பொதியைப் பற்றிய முழு விவரம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா இருக்கும்,
மற்றும் எப்போதோ நிறுவப்பட்ட பொதி மற்றும் அதைச்சார்ந்த கோப்புகள் பற்றிய தகவல்கள்
தேவைப்படும் போதும்
** ஒரு கோப்பானது எந்த பொதியை சார்ந்தது என்பதை அறியும் பொருட்டு
** ஒரு பொதியானது நிறுவப்பட்ட பின்னர் அதைகச்சார்ந்த கோப்புகளில் மாற்றம் செய்யப்பட்டால்
அதைப் பற்றி அறியவும் பயன்படுகிறது. இதை வைத்துக்கொண்டு கனிணியில் நடந்துள்ள மாற்றங்கள்
மற்றும் தொலைந்த கோப்புகளை கண்டுபிடித்துவிடலாம்.
** கோப்பில் சேமிக்கப்பட்ட கட்டமைப்பு(Configuration) தகவல்கள் (அ) அதில் எதாவது மாற்றம்
செய்யப்பட்டருந்தாலோ மிகவும் எளிதில் கணடுபிடித்துவிடலாம்.
பொதி மேலாண்மைனா என்னா
அதை எப்படி செய்வது?
எப்படி? பொதிகளை எளிதில் நிறுவுதல், புதுப்பித்தில் மற்றும் நீக்குவது; பொதிகள் பற்றிய தகவல்களை
எப்படி வெவ்வேறு வழிகளில் கணினியில் இருந்து எடுத்துச்சொல்லுவது; மேலும் கட்டமைப்பு(config
files) கோப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்புபடுத்தி சேமித்து தெறிவிப்பது.
மேற்கூறப்பட்ட அனைத்து பணிகளையும் கணினியே பார்த்துக்கொண்டால் எவ்வளவு எளிதாக இருக்கும்.
அதனால் தான் பல குழுமங்கள் பொதி மேலாண்மை பணிக்கான மென்பொருட்களை செய்ய முயன்றன.
-
சில பொதி மேலாண்மை மென்பொருட்கள் பொதிகளை கையாளும்பொருட்டு சில குறிப்பிட்ட
வழிமுறைகளை பயன்படுத்துகிறது.
-
மற்ற பொதி மேலாண்மை மென்பொருட்கள் பொதிகளை கையாளும்பொருட்டு கோப்புகளை
தொடர்புபடுத்தி அதைக் கருத்தில் கொண்டு செயல்படுகின்றன.
மேற்கண்ட ஒவ்வொரு முறையும் பொதி மேலாண்மையை தன் வசம் இலுக்க வந்தவைகளாகும்.இங்கு
மேற்குறிப்பிட்ட வரியில் பொதியை நிறுவியப்பின்னர் நீக்க இயலாது அதுமட்டும் இல்லாமல் பொதி
பற்றிய தகவல்களை அறிய வழியே இல்லை.
ஆனால் இரண்டாவது முறை மூலம் பொதிகளை நீக்கவும், அதைப்பற்றிய தகவல்களையும் அறிய
முடியும்.இம்முறையில் நன்கு வரையருக்கப்பட்ட கட்டளை வரிகளை நிறுவும் பொருட்டு இயக்க
முடியாது
எந்வொரு பொதி மேலாண்மை மென்பொருளும் மேற்கண்ட இரண்டையும் கலந்து எழுதப்பட வேண்டும்
. எனவே பயனர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு அமைக்கப்படும் எந்தவொரு மென்பொருளும்
வரவேற்ப்பை பெரும்
ரெட் ஹாட் பொதி மேலாண்மையின் முன்னால் இருந்தவைகள்
ரெட் ஹாட் பொதி மேலாண்மை வரக் காரணமாக இருந்த மென்பொருட்களான ஆர்பிபி(RPP),
பிஎம்எஸ்(PMS), பிஎம்(PM) போன்றவற்றை பற்றி காண்போம்
–தொடருமில்ல
[...] பொதி என்றால் என்ன என்பதை ஏற்கனவே படித்திருப்பீர்கள்,இதில் இரண்டு வகைகள் உள்ளன, இதை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம், [...]
ரெட்ஹாட் பொதி மேலாண்மை - முதல் கட்டளை இயக்கம் at கணிமொழி
31 Mar 09 at 11:34 pm