ஆடி - ஜூலை - 2008
நண்பர்களுடன் யாஹூவிலோ ஸ்கைப்பிலோ கதைத்துக் கொண்டிருக்கிறீகள். வேலைக்குக் கிளம்ப நேரமாகிவிட்டது. பேருந்தைப் பிடித்தாக வேண்டும். "catch you later" என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறீர்கள். ஆனாலும், மனதில் ஒரு சின்ன ஆசை: பேருந்தில் அலுவலகம் போய்ச் சேர்வதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஒரு மணி நேரத்தில் இன்னும் கொஞ்சம் கதைக்கலாமே என்று ஆசைப்பட்டதுண்டல்லவா? உங்கள் ஆசையை நிறைவேற்ற வந்துவிட்டது 'மிட்' என அழைக்கப்படும் 'மொபைல் இணையக் கருவி' (Mobile Internet Device a.k.a. MID).