வகை - பறை

அத்துமீறிய மைக்ரோசாப்ட் - அவதியைக் கொட்டித் தீர்த்த பேராசிரியர்

ஆடி - ஜூலை - 2008

சேற்றை வாரியிறைக்கும் மைக்ரோசாப்டின் இம்முயற்சிகளுக்கு ஒருவர் எவ்வாறு பிரதிபலிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்த நான் "தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் இணைந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் மைக்ரோசாப்ட்" எனும் அனுமானங்களின் அடிப்படையிலானப் புகாரை இயற்றியுள்ளேன். "மைக்ரோசாப்டின் படைப்புரிமம் பெற்ற சேற்றைவாரியிறைக்கும் முறைமை" என இப்புகாரை வடிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். தனியானதொரு பிற்சேர்க்கையாக அதனை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். இதன் நோக்கம் இத்தகைய புகார்களும் அதனைத் தொடரும் பிற புகார்களும் நம்மனைவரையுமே பாதகத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே. தேசிய சர்வதேச முகமைகளில் தமது தனியாளுமையை மேம்படுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் முயற்சி மேற்கொள்வதையும் இந்திய பணிமேசை சந்தையில் தமக்கிருக்கும் இறுக்கமான பிடிப்பை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதையும் இப்புகார் விவரிக்கிறது. INFOSYS, TCS, WIPRO, NASSCOM முதலியவை....

அத்துமீறிய மைக்ரோசாப்ட் - அவதியைக் கொட்டித் தீர்த்த பேராசிரியர்

ஆனி - ஜூன் - 2008

எம் உடன் பணிபுரிவோரது பெயருக்கும் எமது ஸ்தாபனத்தின் பெயருக்கும் LITD 15 (இந்திய அரசினை பிரதிநிதிக்க வேண்டி ஏற்படுத்தப்பட்ட 22 அங்கத்தினர்களைக் கொண்ட குழுவின் பெயர்) கமிட்டியின் ஏனைய பிறரது பெயருக்கும் மைக்ரோசாப்ட் ஏற்படுத்திய களங்கமும் அவதூறுமே எமது உளைச்சலுக்கான முதற் காரணம். அரசாங்கத்தால் நன்கு ஏற்படுத்தப் பட்ட முறையொன்று தமது பணியை பூர்த்தி செய்து இந்தியாவின் முடிவில் மாற்றம் இல்லை என உறுதியாகத் தெரிவித்த பின்னும் மைப்ரோசாப்ட் இந்திய தலைமையை தமது நிலையை மாற்ற வேண்டி தொடர்ந்து பாரப்படுத்தியது எமது உளைச்சலுக்கான இரண்டாவது காரணமாகும்.

லினக்ஸ் பயனர் குழு - ஓர் அறிமுகம்

ஆனி - ஜூன் - 2008

இந்த மின்னஞ்சல் குழுவிற்கு ஒரு அஞ்சல் அனுப்பினால், அதன் உறுப்பினர்கள் அனைவரையும் சென்றடையும். யார் வேண்டுமானாலும் பதில் தரலாம். இந்த குழுக்களில் சுவையான விவாதங்கள் பல நடக்கும். யாராவது கேள்வி கேட்டால் பலரும் பதில் தருவர். எல்லா கேள்வி பதில்களும் லினக்ஸ் மற்றும் பிற திறந்த மென்பொருட்கள் பற்றியே இருக்கும். உங்கள் பகுதியில் உள்ள 'லினக்ஸ் பயனர் குழு' பற்றி அறிய இணையத்தை நாடுங்கள்.

திறந்த ஆவண வடிவை ஆதரிப்போம்

சித்திரை - ஏப்ரல் - 2008

உரையாக்கம், அளிக்கைகள், விரிதாட்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலுவலகப் பயன்பாடுகளுக்கான ஒரு வடிவமென திறந்த ஆவண வடிவத்தைக் கொள்ளலாம். ஓபன்ஆபீஸ், கேஆபீஸ், அபிவோர்டு முதலிய பயன்பாடுகள் இவ்வடிவத்தைப் பயன்படுத்துகின்றன.